பொங்கலுக்கு வெளியாகும் துல்கர் சல்மானின் "ஹே சினாமிகா" முக்கிய அப்டேட்!

சென்னை: தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் துல்கர் சல்மான்

தமிழில் இவர் நடிக்கும் திரைப்படங்களும் வெற்றி பெற்று வசூலை குவிக்கிறது அந்த வகையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மிகப்பெரிய வெற்றி பெற்றது

இந்த நிலையில் நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா திரைப்படத்தின் முக்கிய அப்டேட் பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

சர்ப்ரைஸ் கொடுத்து பிளாக்பஸ்டர் வெற்றி

சர்ப்ரைஸ் கொடுத்து பிளாக்பஸ்டர் வெற்றி

தென்னிந்தியாவில் இளம் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் துல்கர் சல்மான் தமிழிலும் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் தமிழில் மிக சரளமாக பேசக்கூடிய துல்கர் சல்மான் நேரடி தமிழ் படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதே சமயம் மிக வித்தியாசமான படங்களை கொடுத்தும் பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார். கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது

பிருந்தா மாஸ்டர் இயக்குனர் அவதாரம்

பிருந்தா மாஸ்டர் இயக்குனர் அவதாரம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் வெற்றியைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இப்பொழுது மற்றுமொரு காதல் கதையில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுவரை நடன இயக்குனராக பலருக்கும் பரிச்சயமாகி இருந்த பிருந்தா மாஸ்டர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் "ஹே சினாமிகா".

ஹே சினாமிகா

ஹே சினாமிகா

முழுக்க முழுக்க காதலை பற்றி உருவாகிவரும் இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால். இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடமே தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி ரிலீசுக்கு தயாராக உள்ளது. பாக்யராஜ், சுஹாசினி மணி ரத்னம், குஷ்பு உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர்.

பர்ஸ்ட் சிங்கிள் ஜனவரி 14-ஆம் தேதி

பர்ஸ்ட் சிங்கிள் ஜனவரி 14-ஆம் தேதி

துல்கார் சல்மான்,அதிதி ராவ், காஜல் அகர்வால் ஆகியோர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில் படக்குழு வரும் பொங்கலுக்கு அட்டகாசமான அப்டேட்டை வெளியிடவுள்ளது . இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X