ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. அஜித் பேட்டி குறித்து தொகுப்பாளினி ஷேரிங்.. வயிறு வலிக்க சிரித்த துல்கர் - ராணா
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிகர் என்பதைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி கவனத்தை அதுவும் நன்மதிப்பில் ஈர்த்து வருகிறார். இதனாலேயே இவர் மீது அன்பு செலுத்தும் ரசிகர்கள் ஏராளம். தனது ரசிகர்கள் மீது அஜித் செலுத்தும் அக்கறை என்பது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதே நேரத்தில் தயாரிப்பாளர்கள் மீதான அக்கறை கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. அஜித் கடைசியாக அளித்த பேட்டி என்றால் அது, தி ஹாலிவுட் ரிப்போட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி தான் இந்த பேட்டியின் போது நடைபெற்ற சம்பவத்தை, அஜித்தை பேட்டி கண்ட தொகுப்பாளினி, அனுபமா சோப்ரா பகிர்ந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித் கடைசியாக அளித்திருந்த இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் நடிகர் விஜய் குறித்தும் அவர் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசல் மரணங்கள் குறித்தும் பேசி இருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, அந்த துயரச் சம்பவத்தில் ஒருவரை மட்டும் காரணம் சொல்லிவிட முடியாது. இதற்கு ஒரு சமூகமாக நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், ரோகிணி திரையரங்கில் நடிகர் விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டதையும் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.

அஜித் பேட்டி: கிரிக்கெட் மைதானங்களில், கோவில்களில் எல்லாம் மக்கள் ஒன்று கூடுகிறார்கள். ஆனால் அங்கெல்லாம் இது போல நடக்கவில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடப்பது வேடிக்கையாக உள்ளது. இதில் இருந்து நாம் ஒரு சமூகமாக வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார். அதன் பின்னர் அவரது கருத்துக்கள் விஜய்க்கு சாதகமாக உள்ளது, விஜய்க்கு எதிராக உள்ளது என்று விவாதங்கள் கிளம்ப, உடனே நான் விஜய்க்கு எதிராக எந்த கருத்தும் சொல்லவில்லை, எனது கருத்துக்கள் சில விஷமிகளால் திரித்து பரப்பப்படுகிறது என்று தெரிவித்தார்.
அசிங்கமா போச்சு மொமண்ட்: இப்படி இருக்கும்போது, இந்த பேட்டியின் போது நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை தி ஹாலிவுட் ரிப்போட்டர் ஊடகத்தின் தொகுப்பாளினி, அனுபமா சோப்ரா பகிர்ந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, காந்தா படக்குழுவினருடன் நடத்திய பேட்டியின்போது, அஜித் பேட்டி குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். அதாவது, " நான் துபாயில் அஜித்தை பேட்டி எடுத்தேன். அஜித் அந்த பேட்டிக்கு தனியாக வந்திருந்தார். அஜித் ஒரு சூப்பர் ஸ்டார், ஆனால் அவரே தனியாக வந்துள்ளார். அவரைப் பேட்டி எடுக்கச் சென்ற நான் மேக்-அப் போட ஒரு நபரை அழைத்துச் சென்றுள்ளேன். அதைப் பார்த்த எனக்கு மிகவும் கூச்சமாகிவிட்டது" என்று பகிர்ந்து கொண்டுள்ளார். இதைக் கேட்டதும் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ராணா விழுந்து விழுந்து சிரித்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications











