துல்கர் சல்மான் படத்தில் இப்படி ஒரு சஸ்பென்சா?

திருவனந்தபுரம்:துல்கர் சல்மான், சவுபின் ஷாஹிர், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியாகிய மலையாளப் படம் ஒரு எமன்டான் பிரேமகதா. முழு நீள நகைச்சுவைப் படமாக வெளியாகியுள்ள இப்படம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் துல்கரின் கதாபாத்திரத்தின் பெயர் கடைசி வரை சொல்லப்பட்டிருக்காது. அனைவரும் அவரை லல்லு என்ற செல்லப்பெயரிலேயே அழைப்பார்கள். படத்தின் இறுதி காட்சியிலேயே அவரது கதாபாத்திரப் பெயர் சொல்லப்படும்.

 Dulquer goes Simbus way

ஒரு குழந்தை அவரிடம் உங்கள் பெயர் என்ன என கேட்கும்போது மோகன்லால் என பதிலளிப்பார் துல்கர்.

முன்னதாக தமிழில், சிம்புவின் "அச்சம் என்பது மடைமையடா" படத்திலும் சிம்புவின் கதாபாத்திர பெயர் சஸ்பென்சாக வைக்கப்பட்டிருக்கும். படத்தில் அவரது பெயர் ரஜினிகாந்த். படம் முழுக்க தனது பெயரை கூறாத சிம்பு, கிளைமேக்சில் தான் தனது பெயரை வெளிப்படுத்துவார்.

 Dulquer goes Simbus way

அந்தந்த மொழி சூப்பர் ஸ்டார்களின் பெயரை வைத்தது மட்டுமல்லாமல், கிளைமேக்ஸ் வரை நாயகன் பெயரை சஸ்பென்சாக வைத்திருந்ததில் இரு படங்களும் ஒத்துப்போயுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X