தலைமறைவு கிரிமினல் கதை.. 5 மொழிகளில் வெளியாகும் துல்கர் சல்மானின் 'குரூப்..' அசத்தும் போஸ்டர்!
கொச்சி: துல்கர் சல்மான் நடித்துள்ள மெகா பட்ஜெட் படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.
பிரபல மலையாள மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
படங்களை தயாரித்தும் வருகிறார். கடைசியாக அவர் தயாரித்து நடித்த வரனே அவஷ்யமுண்டு சூப்பர் ஹிட்டானது.

கண்ணும் கண்ணும்
இவர் தமிழில் வாயைமூடி பேசவும், ஓகே கண்மணி, நடிகையர் திலகம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படங்களில் நடித்துள்ளார். இப்போது ஹே சினாமிகா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இதில் காஜல் அகர்வால், அதிதி ராவ் உட்பட பலர் நடித்துள்ளனர். டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கியுள்ளார்.

வேஃபாரர் பிலிம்ஸ்
இதற்கிடையே அவர் நடித்து வரும் மலையாள படம், குரூப் (Kurup).இதை ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்குகிறார். இவர்தான் துல்கர் சல்மானை செகண்ட் ஷோ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தியவர். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தனது, வேஃபாரர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார். உடன் எம் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

சுகுமார குரூப்
இந்தப் படம் கேரள போலீஸுக்கும் சர்வதேச போலீசுக்கும் தண்ணிக் காட்டிய, பிரபல கிரிமினல் சுகுமார குரூப் என்பவருடையை கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. வெளிநாட்டுக்குத் தப்பியோடி, தலைமறைவாக இருக்கும் அவர், இன்றளவும் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார்.

ஷோபிதா துலிபாலா
இந்தப் படம், ரூ.35 கோடி செலவில் உருவாகிறது. அதிகச் செலவில் உருவாகும் மலையாளப் படங்களில் இதுவும் ஒன்று. 80- களின் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் ஷோபிதா துலிபாலா ஹீரோயினாக நடிக்கிறார். டோவினோ தாமஸ், இந்திரஜித் உட்பட பலர் நடிக்கின்றனர்.

தியேட்டரில் ரிலீஸ்
இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. முதலில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்போது தியேட்டரில் வெளியாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











