Kaantha Trailer: இதுதாண்டா சினிமா.. சிம்பு வெளியிட்ட காந்தா டிரைலர்..துல்கர் சல்மான் தூள் கிளப்புறாரே!

சென்னை: நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசனாக நடித்து அசத்திய துல்கர் சல்மான் மீண்டும் பழம்பெரும் நடிகர் ஒருவரது வாழ்க்கை வரலாறு கதையை தழுவிய திரைக்கதையில் நடித்துள்ளார். வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ள 'காந்தா' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிலையில், சற்றுமுன் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் 'காந்தா' டிரைலரை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே துல்கர் சல்மான், சமுத்திரகனி, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியான காந்தா படத்தின் டீசரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இதுதாண்டா சினிமா என சொல்லத் தூண்டும் அளவுக்கு படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது.

Dulquer Salaman s Kaantha Trailer released now by Silambarasan TR
Photo Credit:

அப்படியே கிளாசிக் சினிமா காலக்கட்டத்திற்கே இந்த காந்தா திரைப்படம் இம்மாதம் ரசிகர்களை கால சக்கரத்தில் ஏற்றி பின்னோக்கி அழைத்துச் செல்ல காத்திருக்கிறது.

சிம்பு வெளியிட்ட காந்தா டிரைலர்: செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா படத்தின் டிரைலரை சற்றுமுன் நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டி.கே. மகாதேவன் எனும் நடிகராக துல்கர் சல்மான் காந்தா படத்தில் நடித்துள்ளார். இயக்குநராக சமுத்திரகனியின் நடிப்பும் போலீஸ் அதிகாரியாக ராணா டகுபதியின் மிரட்டலும், ஹீரோயினாக நெகட்டிவ் ஷேடில் பாக்யஸ்ரீ போர்ஸும் வேறலெவல் மீட்டரில் நடித்துள்ளனர்.

தியாகராஜ பாகவதர் கதையா?: MKT என அழைக்கப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதார் தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். அவருடைய கதையை கொஞ்சம் ஆல்டர் செய்து இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், MKT வருவது போல TKM என TK மகாதேவன் என ஹீரோவுக்கு பெயரை வைத்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் சரிந்த கதை: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான தியாகராஜ பாகவதரின் எழுச்சியும் வீழ்ச்சியுமே மிகப்பெரிய கதையாக உள்ள நிலையில், அதனை திரைக்காவியமாக கொடுக்க துல்கர் சல்மான் முடிவு செய்துள்ளது வரவேற்புகளை பெற்றுள்ளது. வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ள இந்த காந்தா திரைப்படம் ரசிகர்களை கண்டிப்பாக அந்த காலத்துக்கே கடத்தி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2011ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான தி ஆர்ட்டிஸ்ட் திரைப்படத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடிய நிலையில், அந்த படம் ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிக் குவித்தது குறிப்பிடத்தக்கது. லக்கி பாஸ்கர், லோகா என வெற்றி மாலைகளை சூடி வரும் துல்கர் சல்மானுக்கு காந்தா படமும் வெற்றிப் படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X