இயக்குநரை கட்டி பிடித்து எமோஷனல் ஆன துல்கர் சல்மான், மிருணாள் தாகூர்.. படம் செமயா வந்துருக்கு!

சென்னை: நடிகர்கள் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சீதா ராமம்.

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சீதா ராமம் திரைப்படம் தற்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.

தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் சங்கர் சல்மான் நாயகி மிருணாள் தாகூர எமோஷனலான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

ராம் சீதா காம்போ சூப்பர்

ராம் சீதா காம்போ சூப்பர்

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் போன்ற பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் சீதா ராமம். இந்தியா பாகிஸ்தான் பிரச்சினைக்கு இடையே ராம் சீதாவின் காதல் ராம் செய்த தியாகம், இவர்களைத் தேடி அலையும் ராஷ்மிகா என்று ஒட்டுமொத்த காதல் காவியமாக வெளிவந்து இருக்கிறது சீதா ராமம்.

பலம் சேர்க்கும் துணை கதாபாத்திரங்கள்

பலம் சேர்க்கும் துணை கதாபாத்திரங்கள்

20 வருடத்திற்கு முன்பு எழுதிய ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டு அட்ரஸ் தெரியாத சீதா ராமை தேடி அலைகிறார் ராஷ்மிகா. 20 வருடங்களுக்கு பின்பு அந்த கடிதத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்ற சீக்ரெட்டை இயக்குநர் கச்சிதமாக படம் ஆக்கி இருக்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இளவரசியாக வரும் நாயகி அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார். வழக்கம்போல் துல்கர்சர்மானின் இயல்பான நடிப்பு வேற லெவல். பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் துணை கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்தது படத்திற்கு பலம்.

மனதை வெல்லும் காதல்

மனதை வெல்லும் காதல்

ராணுவத்தில் வேலை செய்யும் துல்கர் சல்மான், அவரை காதலிக்கும் நாயகி என்று ஒரு காதல் காவியமாக மட்டும் இல்லாமல் தேசப்பற்று நிறைந்த படமாகவும் சீதாராமன் இருக்கின்றது. 20 வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தையை காப்பாற்றும் துல்கர் சல்மான், எதிரிகளிடம் சிக்கிக் கொள்ள பிறகு என்ன நடக்கின்றது என்பதை சீதா ராமம் திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

கட்டி பிடித்து எமோஷன் ஆனா நடிகர்கள்

கட்டி பிடித்து எமோஷன் ஆனா நடிகர்கள்

படத்தை பார்க்கும் ரசிகர்களின் கண்கள் குளமாவதும், மனசு துடிப்பதையும் யாராலும் தடுக்க முடியவில்லை அந்த அளவிற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வந்த துல்கர் சல்மான் மற்றும் நாயகி மிருணாள் தாகூர் இயக்குநர் ஹனு ராகவபுடியை கட்டிப்பிடித்து அழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X