Dulquer Salmaan: துல்கர் சல்மானுடன் இணைகிறாரா அட்லீ..? டைட்டிலுடன் வெளியாகவுள்ள மெகா அப்டேட்!

சென்னை: மலையாள முன்னணி நடிகர் துல்கர் சல்மானின் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படம் இம்மாதம் ஓணம் ஸ்பெஷலாக வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 43வது படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான்.

 Dulquer Salmaan: Dulquer Salmaans new film is being directed by Atlees assistant

அதன்பின்னர் அவர் நடிக்கவிருக்கும் படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

துல்கர் சல்மானுடன் இணைகிறாரா அட்லீ?: மலையாள டாப் ஹீரோக்களில் ஒருவரான துல்கர் சல்மான், தற்போது பான் இந்தியா நடிகராக மாஸ் காட்டி வருகிறார். துல்கர் நடிப்பில் குரூப், சுப், சல்யூட், சீதா ராமம் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தன. இதன் தொடர்ச்சியாக தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படம் வெளியாகவுள்ளது.

கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்த இந்த ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் சூர்யாவின் 43வது படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கவுள்ள இப்படத்தின் அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மேலும் ஒரு தமிழ்ப் படத்திலும் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகவுள்ளதாம். ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ள இந்தப் படத்தை அட்லீ இயக்குவதாக சொல்லப்பட்டது. ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியுள்ள அட்லீ, அடுத்து துல்கர் சல்மானுடன் இணைகிறாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

 Dulquer Salmaan: Dulquer Salmaans new film is being directed by Atlees assistant

ஆனால், துல்கர் சல்மானின் இந்தப் படத்தை அட்லீயின் உதவியாளர் தான் இயக்கவுள்ளாராம். அட்லீயின் உதவியாளர் கார்த்திகேயன் வேலப்பனின் முதல் படமாக இது உருவாகவுள்ளது. மேலும், இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் துல்கர் சல்மான் - கார்த்திகேயன் வேலப்பன் இணையும் படத்திற்கு 'கோலி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கோலி படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் உட்பட மற்ற தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட முடிவு செய்துள்ளதாம். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதா ராமம் என கோலிவுட் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த துல்கர், அடுத்தடுத்து கிங் ஆஃப் கோதா, சூர்யா 43, கோலி படங்களிலும் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X