Just In
- 44 min ago
சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க டாக்டர்க்கிட்டேயே கேட்ட ஹேமந்த்.. வெளியான பகீர் தகவல்!
- 56 min ago
ரியோ முகத்தில் ரியல் ஹேப்பி.. வீட்டுக்குப் போன உடனே ரிதி பாப்பாவை எப்படி தூக்கி கொஞ்சுறாரு பாருங்க!
- 3 hrs ago
அம்சமான போட்டோஷூட்.. அழகை அள்ளும் ஐஸ்வர்யா தத்தா... வாய் பிளந்த ரசிகர்கள்!
- 3 hrs ago
தாவணியில் கலக்கும் குட்டி ஜானு... மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள்!
Don't Miss!
- News
அமெரிக்க அதிபராக பதவியேற்கும் ஜோ பிடன் - எவ்வளவு சம்பளம் என்னென்ன சலுகைகள் தெரியுமா
- Sports
ரெண்டு குழுவா இந்தியாவுக்கு வராங்க இங்கிலாந்து வீரர்கள்... ஸ்டிரிக்ட் குவாரன்டைனுக்கு திட்டம்
- Automobiles
விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?
- Education
ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
உச்சத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 49,600க்கு மேல் வர்த்தகம்..!
- Lifestyle
தைராய்டு பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த யோகாசனங்களை செய்யுங்க...
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிறந்த ரொமான்டிக் மூவி.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.. துல்கர் சல்மான்
சென்னை: நான் நடித்ததிலேயே சிறந்த ரொமான்டிக் படம் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் தான் என்று துல்கர் சல்மான் கூறினார்.
நடிகர் துல்கர் சல்மான் கடைசியாக தமிழில் நடிகையர் திலகம் படத்தில் நடித்து இருந்தார். கடைசி நேரடி தமிழ் படம் என்றால் சோலோ படத்தை சொல்லலாம் . நீண்ட நாட்களாக தமிழ் ரசிகர்கள் ஏன் துல்கர் சல்மான் தமிழில் நடிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியான தமிழ் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த படம் துல்கரின் 25வது படமாகும் .

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்திருக்கிறது இதில் பேசிய துல்கர் சல்மான் இந்த கதையை கேட்டு இரண்டு வருடங்கள் கழித்து தான் நடிக்க ஆரம்பித்தேன் இந்த கதை சொல்லபட்ட நேரத்தில் நான் அவ்வளவு பிஸியாக இருந்தேன் இந்த படம் ஐந்து வருடமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் நான் குறிப்பாக இரண்டு வருடங்களை வீணடித்திருக்கிறேன் என்று வருத்ததுடன் கூறினார் .
இந்த படத்தில் விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளரான ரக்ஷ்ன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் துல்கர் மற்றும் ரக்ஷ்னுக்கு இடையே நல்ல நட்பு உருவாகியிருப்பது பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிந்தது . இருவரும் மாமா மச்சான் என்று மேடையிலே வெகு இயல்பாக பேசினார்கள்.

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் கௌதம் மேனன் நடித்திருக்கிறார். இது முன்னோட்டம் பார்த்த அனைவருக்கும் தெரியும் . இந்த நிகழ்வில் பேசிய துல்கர் சல்மான் இந்த படத்தின் நாயகன் கௌதம் மேனன் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று கூறினார். மேலும் பேசிய துல்கர் இந்த படம் நான் நடித்ததிலே சிறந்த ரொமான்டிக் காட்சிகள் நிறைந்த காதல் படம் என்று கூறினார்.

இந்த படத்தை வயோகாம் 18 நிறுவனமும் ஆன்டோ ஜோசப்பும் இணைந்து தயாரித்துள்ளனர் . இந்த படத்தில் துல்கர் சல்மான் ,ரக்ஷ்ன்,ரீட்டு வர்மா,கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருக்கிறார் .