King of Kotha: கேங்ஸ்டர் கதை துல்கர் சல்மானுக்கு கை கொடுத்ததா? கிங் ஆஃப் கோதா முதல் நாள் வசூல்!

சென்னை: நடிகர் துல்கர் சல்மானின் வித்தியாசமான நடிப்பில் நேற்று திரையரங்கில் ரிலீஸான கிங் ஆஃப் கோதா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகி உள்ள கிங் ஆஃப் கோதா படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

Dulquer Salmaan King of Kothas 1st-day box office collection

இவர்களுடன் ஷபீர், பிரசன்னா, கோகுல் சுரேஷ், நைலா உஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.

கிங் ஆஃப் கோதா: கேரளாவில் அதிக குற்றங்கள் அதிகம் நடக்கும் இடமான கோதா என்ற ஊரில் துல்கர் சல்மான் மற்றும் ஷபீர் கல்லரக்கல் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். துல்கர் சல்மான் ரௌடியாக அந்த ஊரையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இந்த நேரத்தில், காதலியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமியும், தம்பியும் இறந்ததால் மனம் உடைந்து போன துல்கர் சல்மான் பிசினஸை மட்டும் தவிர்த்து விடுகிறார்.

படத்தின் கதை: இந்த நேரத்தில் நண்பன் ஷபீர் எதிரியுடன் சேர்ந்து கொண்டு அந்த பிசினஸை தொடங்குகிறார். இதனால் மனம் உடைந்து போன துல்கர் சல்மான் அந்த ஊரைவிட்டே வெளியேறிவிடுகிறார். இதனால் கோதா பகுதியில் ஷபீரின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி குற்றச்சம்பங்களும் அதிகரிக்கிறது.

அடுத்து என்ன ஆனது: அதைத்தொடர்ந்து போலீசாக வரும் பிரசன்னா இந்த வில்லன் கோஸ்டியை அடக்க முடியாமல் மீண்டும் துல்கர் சல்மானை கோதா நகரத்திற்குள் அழைத்து வர வைக்க முயற்சி செய்கிறார். அவருடைய முயற்சி என்ன ஆனது, துல்கர் சல்மான் மீண்டும் அந்த ஊருக்கு வந்தாரா...இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

முதல் நாள் வசூல்: இத்தனை நாள் சாக்லெட் பாயாக நாம் பார்த்த துல்கர் சல்மான், இந்த படத்தில் கேங் ஸ்டாரா மிரட்டி இருக்கிறார். மிகப்பெரும் ரௌடியாக அறியப்படும் துல்கர் சல்மானை சுற்றி தான் படம் நகர்கிறது. இந்த படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு நேற்று வெளியானது. இந்நிலையில் கிங் ஆஃப் கோதா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் முதல் நாளில் 7.7 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X