துல்கர் சல்மானின்..ராணுவ வீரன் ராம் போரூற்றி எழுதிய காதல் கதை..பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
சென்னை: துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படம் தமிழ் , தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.
பெரும் வெற்றிபெற்ற மஹாநடி படத்தின் தயாரிப்பாளர்களான வையெஜந்தி மூவீஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ், துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் தங்களுடைய புதிய படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் சார்பாக பிரியங்கா தத், ஸ்வப்னா தயாரிக்கிறார்கள். ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார்.

வெற்றிப்படம்
மஹாநடி பட தயாரிப்பாளர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் நாடு முழுவதும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய சினிமாவில் நினைவுகூரத்தக்க 50 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் விதமாக, வைஜெயந்தி மூவீஸ் சமீபத்தில் ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும், ஒரு மிகப்பெரிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். இது தவிர நந்தினி ரெட்டியின் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது மற்றும் ஜதி ரத்னலுவின் படமும் முடியும் தருவாயில் உள்ளது.

அம்சமான அழகு
மலையாளத்தல் அதிக படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வருகிறார் துல்கர் சர்மாக, வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி , நடிகையர் திலகம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து ஒரு நிறந்தர இடத்தை பிடித்து விட்டார் துல்கர். அம்சமான முகம், அழகான சிரிப்பு எனஇவரின் அழகுக்கு மயங்காதவர்களே இல்லை

ராணுவ வீரரின் காதல் கதை
இவரது 35பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இவரது அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதில், "ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை" என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படம் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்ற நேர்மறை அதிர்வுகளை உருவாக்குகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த புதிய படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார்.

போர் பின்னணி காதல்
இப்படத்தின் கான்செப்ட் போஸ்டர் ஒரு அழகான டெலிகிராமை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நிழற்படத்தில் துல்கர் ஒரு ராணுவ வீரனாக தோன்றுகிறார், அதில் இரண்டு கைகளும் ஒன்றாக இணைவது ஒரு காதல் பக்கத்தைக் குறிக்கிறது. போர்ப் பின்னணியில் ஒரு காதல் என்பதே படத்தின் மிகவும் ஈர்க்கத்தக்க அம்சமாக உள்ளது.

காதல் கதை
இப்படத்தின் கதை 1964ம் ஆண்டு நடைபெறும் காதல் கதையை மையமாக கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார். வைஜெயந்தி மூவீஸ் வழங்கும் இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் சார்பாக பிரியங்கா தத், ஸ்வப்னா தயாரிக்கிறார்கள். வித்தியாசமான இந்த போஸ்டர் வெளியாகி துல்கர் ரசிகர்கள் மத்தியில் ஒ ரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











