துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ தமிழ் ட்ரெய்லர் ரிலீஸ்: யார் தான் அந்த சீதா? எகிறும் எதிர்பார்ப்பு!

சென்னை: துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'சீதா ராமம்' படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு, தமிழ், மலையாளம் என மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார்.

தெலுங்கு ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், இன்று தமிழ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சாக்லேட் பாய் துல்கர் சல்மான்

சாக்லேட் பாய் துல்கர் சல்மான்

மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள அவர், ரசிகைகளின் சாக்லெட் பாயாக வலம் வருகிறார். சமீபத்தில் துல்கர் சல்மான் நடித்து தமிழில் வெளியான 'ஹேய் சினாமிகா' படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள 'சீதா ராமம்' ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாகிறது.

ராணுவ வீரர்

ராணுவ வீரர்

ஹனு ராகவபுடி இயக்கத்தில் தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள சீதா ராமம் படத்தில், துல்கர் சல்மான் ராணுவ வீரர் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். துல்கர் சல்மான் ராணுவ வீரர் கேரக்டரில் நடித்திருந்தாலும், அதிரடி ஆக்சன் காட்சிகள் இல்லாமல், லவ்லி ரொமாண்டிக் ஹீரோவாக தோன்றுவார் எனத் தெரிகிறது.

ட்ரெய்லர் வெளியீடு

ட்ரெய்லர் வெளியீடு

'சீதா ராமம்' படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக காணப்பட்டன. பாடல்கள், டீசர் என அனைவரிடமும் கவனம் ஈர்த்த 'சீதா ராமம்' படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லரும் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

யார் தான் அந்த சீதா

யார் தான் அந்த சீதா

'சீதா ராமம்' ட்ரெய்லரை பார்க்கும் போதே, படத்தின் கதை இதுதான் என கெஸ் பண்ண முடிகிறது. ராஷ்மிகாவிற்கு வரும் ஒரு கடிதத்தை சீதா என்பவரிடம் கொடுக்க வேண்டும் என, அவரைத் தேடுகின்றார். ஆனால், அது முடியாமல் போக, சீதாவின் காதலன் ராம்-ஐ முதலில் கண்டுபிடிக்க ராஷ்மிகா முடிவெடுக்கிறார். 1965ம் ஆண்டில் இருந்து தொடங்கும் இந்த கதை, சமகாலத்தில் வந்து முடியும் எனத் தெரிகிறது.

கவனம் ஈர்க்கும் ராஷ்மிகா பாத்திரம்

கவனம் ஈர்க்கும் ராஷ்மிகா பாத்திரம்

இன்னொரு பக்கம் சீதாவையும் ராம்மையும் தேடும் ராஷ்மிகாவின் பாத்திரம் குறித்தும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அஃப்ரின் என்ற ராஷ்மிகாவின் பாத்திரத்தில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ்கள் இருப்பதையும் ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது. இதனால், 'சீதா ராமம்' படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறது. முன்னதாக 'சீதா ராமம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில், இனி காதல் படங்களில் நடிக்க மாட்டேன் என துல்கர் சல்மான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X