Kaantha worldwide collection: ‘காந்தா‘ வசூலில் ஜெயித்ததா?தோற்றதா? உலகளவில் முதல் நாள் வசூல் விவரம்!

சென்னை: நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியான 'காந்தா' திரைப்படம் முதல் நாளில் மோசமான வசூலை பெற்றது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காந்தா திரைப்படத்திற்காக காத்திருந்த நிலையில், ரசிகர்களிடம் இருந்து வந்த நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் மந்தமாகவே உள்ளது.

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கி இருக்கும் திரைப்படம் காந்தா. இப்படத்தில் துல்கர் சல்மானுடன், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்கியஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பான் இந்திய திரைப்படமாக நேற்று தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது.

Kaantha box office Dulquer Salmaan
Photo Credit:

காந்தா படத்தின் கதை: இப்படத்தில் மூத்த திரைப்பட இயக்குனரான சமுத்திரக்கனி தனது தொழில் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார். பிரபல நடிகராக டி.கே மகாதேவன் (துல்கர் சல்மான்) வருவதற்கு சமுத்திரக்கனி தான் காரணமானவராக இருக்கிறார். இவரது இயக்கத்தில் மீணடும் துல்கர் சல்மான் 'சாந்தா' என்ற படத்தில் நடிக்கிறார். ஆனால், படத்தின் முடிவை மாற்றுமாறு துல்கர் சல்மான் சொல்ல இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. இருவருக்கும் இடையிலான ஈகோ பிரச்னைகள் காரணமாக படம் கைவிடப்படுகிறது.

அட்டகாசமான நடிப்பு: ஒருகட்டத்தில் மாடர்ன் ஸ்டுடியோ படத்தை எடுத்தே ஆக வேண்டும் என அழுத்தம் கொடுத்ததால், சமுத்திரக்கனி, துல்கல் சல்மான் ஆகியோர் மீண்டும் படத்தை தொடர ஒத்துக்கொள்கின்றனர். மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது, முதல் நாள் படப்பிடிப்பில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. படத்தின் பெயரை காந்தா என்று கதாநாயகன் மாற்றுகிறான். இயக்குனரின் வளர்ப்பு மகளான குமாரி (பாக்யஸ்ரீ போர்ஸ்) ஹீரோயினாக நடிக்க இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்படுகிறது. ​குமாரிக்கு ஹீரோ மீது காதல் வர, இது சமுத்திரக்கனிக்கு பிடிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் படபிடிப்பு நடைபெறும் ஸ்டுடியோவில் குமாரி கொலை செய்யப்படுகிறாள். குமாரியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தான் காந்தா படத்தின் மீதி கதை.

படத்தின் நீளம்: காந்தா திரைப்படத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி போட்டி போட்டு நடித்துள்ளார்கள். இருவரும் படம் முழுக்க நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்கள். ஏமாற்றம், கோபம், சோகம்,காதல் என அனைத்து பரிமாணத்திலும் மம்முட்டியின் மகன் என்பதே துல்கர் சல்மான் நிரூபித்துவிட்டார். ஆனால், தொடர்ந்து விசாரணை நீளும் காட்சிகள் ரசிகர்களிடம் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதோடு படத்தின் நீளத்தி சற்று குறைத்து இருந்தால் நன்றாக இருக்கும் என படம் பார்த்தவர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

முதல் நாள் வசூல்: நேற்று திரையரங்கில் வெளியா காந்தா திரைப்படம் முதல் நாள் வசூல், படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. சாகசத் திரைப்படங்களுக்கு வழக்கமாக கிடைக்கும் வரவேற்பை இந்த படத்தில் பிரதிபலிக்கவில்லை. தமிழ்நாட்டில் 'காந்தா' படத்திற்கான முன்பதிவு மிகவும் குறைவாக இருந்த போதிலும், படத்தின் வசூல் கணிசவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் 'சாக்னில்க்' தளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தப் படம் இந்தியாவில் ரூ 4 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. உலக அளவில் இப்படம் 7 முதல் 8 கோடி வரை வசூலை பெற்றுள்ளது.

'கிங் ஆஃப் கோதா' மற்றும் 'குருவாயூரம்பல நாடகை' போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு துல்கர் சல்மான் நடித்துள்ள நேரடி தமிழ்ப் படமாக 'காந்தா' வெளியாகியுள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியானது. துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கிய திரைப்படமாக கருதப்பட்டது. காந்தா திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டாலும், வசூல் ரீதியாக இன்னும் வேகம் எடுக்கவில்லை. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான 'காந்தா', வரவிருக்கும் நாட்களில் வசூலில் முன்னேற்றம் காணும் என படக்குழு நம்புகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X