துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா.. இத்தனை கோடிகளுக்கு டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனையா?
சென்னை: துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆஃப் கோதா படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
Zee Studios மற்றும் Wayfarer Films வழங்கும் கிங் ஆஃப் கோதா படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் துல்கர் சல்மான்: சீதாராமம் படத்துக்குப் பிறகு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக உள்ள படம் கிங் ஆஃப் கோதா. அபிலாஷ் ஜோஷி இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய், ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை பான் இந்தியப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ரக்கட் பாயாக: ஒகே ஒகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் சாக்லெட் பாயாக செம க்யூட்டாக வலம் வந்த துல்கர் சல்மான். கிங் ஆஃப் கோதா படத்தில் ரக்கட் பாயாக கேங்க் ஸ்டராக சும்மா கெத்தாக மிரட்டி இருக்கிறார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஓணம் பண்டிகைக்கு: அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருக்கும் இப்படத்தின் இந்த டீஸர், நிச்சயமாகப் பார்ப்பவர் அனைவரிடத்திலும் ஒரு பேரதிர்வை ஏற்படுத்துவதுடன், திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இப்படம் 2023 ஓணம் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் படமாக்கப்பட்டது.
டிஜிட்டல் ரைட்ஸ்: ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை பிரபல OTT நிறுவனம் ரூ.55 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே கிங் ஆஃப் கோதா படம் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. மேலும் துல்கன் சல்மானை ரக்கட் பாயாக திரையில் பார்க்க டீன் ஏஜ் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











