அமரனுடன் போட்டி போடும் லக்கி பாஸ்கர்.. ஆரவாரமின்றி வசூல் வேட்டை.. 7 நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
சென்னை: வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. மீனாட்சி சவுத்ரி,ஆயிஷா கான்,ஹைப்பர் ஆதி, பி. சாய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்,சீதா ராமம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் துல்கர் சல்மானுக்கு என்று தனி இடம் உண்டு. குறிப்பான டீன் ஏஜ் பெண்கள் கொண்டாடும் நாயகனாகன துல்கர் சல்மான் இருக்கிறார்.இவரது நடிப்பில் அக்டோபர் 31ந் தேதி தீபாவளிக்கு வெளியான திரைப்படம் தான் லக்கி பாஸ்கர். இந்த படத்தில் துல்ககர் சல்மான் கணவர், தந்தை, சகோதரர் என பல பரிமானங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

லக்கி பாஸ்கர் படத்தின் கதை: இந்த படத்தின் கதை 1989 கால கட்டத்தில் நடப்பதாகும் இதில், துல்கர் சல்மான், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக வங்கியில கேஷியராக வேலை பார்த்து வருகிறார். குடும்ப சூழல், கடன் நெருக்கடியால் முதல் முறையாக பாஸ்கர் நேர்மை தவறும் சூழல் உருவாகிறது.அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பது தான் லக்கி பாஸ்கர் படத்தின் கதை இதில்,துல்கர் சல்மானின் மனைவியாக சுமதி என்கிற கதாபாத்திரத்தில் மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். அவரது நடிப்பு திரையில் சிறப்பாக இருந்தாலும், அவரது கதாபாத்திரத்தை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
திணறும் படங்கள்: தமிழில் அமரன், பிரதர், பிளடி பெக்கர், லக்கி பாஸ்கர் தீபாவளிக்கு வெளியாகின.இதில், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்திற்கு மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை ஒட்டு மொத்த மக்களும் கொண்டாடினார்கள் இதனால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால்,இந்த படத்தோடு வெளியான ஜெயம் ரவியின் பிரதர் மற்றும் கவினின் பிளடி பெக்கர் படங்கள் போட்ட முதலைக்கூட எடுக்க முடியாமல் திணறி வருகின்றன.
படத்தில் வசூல்: ஆனால், துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் சத்தமே இல்லாமல் வசூலை அள்ளி வருகிறது. லக்கி பாஸ்கர் படம் 7 நாள் உலகளவில் ரூ. 71.2 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தோடு மூன்று திரைப்படங்கள் வெளியான நிலையிலும் லக்கி பாஸ்கர் படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் வந்ததை அடுத்து காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











