ரத்தக்கண்ணீர் எம்.ஆர். ராதாவாக மாறிய துல்கர் சல்மான்.. அடேங்கப்பா.. டைட்டிலே சும்மா மிரட்டுதே!

சென்னை: மம்முட்டியின் மகனுக்கு நடிக்கவா சொல்லித்தர வேண்டும் என்பது போல ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பால் அசத்தி லக்கி பாஸ்கராக வலம் வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். ஏற்கனவே நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசனாக நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய துல்கர் சல்மான் தற்போது ரத்தக்கண்ணீர் எம்.ஆர். ராதாவாக நடிக்கப் போகிறாரா என்கிற கேள்வி அவரது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்ததும் கிளம்பியிருக்கிறது.

கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. தீபாவளிக்கு வெளியான படங்களிலேயே அமரன் படத்திற்கு பிறகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படமென்றால் அது லக்கி பாஸ்கர் தான். ஓடிடியில் வெளியாகியும் ஏகப்பட்ட ரசிகர்களை அந்த படம் கவர்ந்தது.

dulquer salman kaantha mr radha

இந்நிலையில், துல்கர் சல்மானின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. சினிமாவுக்கு தான் வந்து 13 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் படமாக இது இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

சினிமாவில் 13 ஆண்டுகள்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் கடந்த 2012ம் ஆண்டு 'செகண்ட் ஷோ’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். உஸ்தாத் ஹோட்டல், 3 சுந்தரிகள், பட்டம்போலே என மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், தமிழில் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த துல்கர் சல்மான் தொடர்ந்து தமிழில் சோலோ, தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். 13 ஆண்டுகள் சினிமாவில் பல வெற்றிப் படங்களையும் பல மறக்க முடியாத நடிப்பையும் கொடுத்து ரசிகர்களை கொள்ளையடித்த இந்த லக்கி பாஸ்கர் அடுத்ததாக இன்னொரு மிரட்டலான கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அடியே 'காந்தா’: துல்கர் சல்மானின் புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்துக்கு 'காந்தா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அப்படியே அச்சு அசல் எம்.ஆர். ராதா போல கோட் சூட் போட்டுக் கொண்டு முகபாவணை எல்லாம் வைத்து போஸ் கொடுத்திருக்கிறார் துல்கர் சல்மான்.

எம்.என். ராஜம் கதாபாத்திரத்தில் யார்?: இந்த படம் ரத்தக்கண்ணீர் படத்தின் மறு உருவாக்கமா? அல்லது எம்.ஆர். ராதாவின் பயோபிக் படமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான ரத்தக்கண்ணீர் படமாக இருந்தால் இந்த படத்தில் எம்.என். ராஜம் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மிஸ்டர் பச்சன் எனும் தெலுங்கு படத்தில் நடித்த பாக்யஸ்ரீ போஸ் இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜெமினி கணேசனாக: நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான சாவித்ரியின் பயோபிக் படமான நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் அசால்ட்டாக நடித்து ரசிகர்களை அப்படியே நம்ப வைத்த துல்கர் சல்மான் 'காந்தா’ படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை பிளாக் அண்ட் ஒயிட் காலத்துக்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X