அனுராக் காஷ்யப் இயக்கத்தில் மலையாள ஹீரோ! - டைட்டில் இதோ..!
கொச்சின் : மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வரும் துல்கர் சல்மான், வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'சோலோ' திரைப்படம் பெரிய வெற்றியடையாமல் போனது.
மலையாள சினிமாவோடு முடங்கிவிடாமல் சமீபகாலமாக தனது நடிப்பு எல்லையை, தமிழ், தெலுங்கு என விரிவுபடுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இந்தியிலும் 'கர்வான்' என்கிற படம் மூலம் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

'கர்வான்' படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் தற்போது, பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் டைரக்ஷனில் நடிக்கிறார் துல்கர். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் ஆனந்த் எல்.ராய் எழுதியுள்ளார்.
இந்தப்படத்திற்கு 'மேன்மர்ஷியான்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முக்கோணக் காதல் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் டாப்ஸி மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். வரும் ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications











