துல்கர் சல்மான் பிறந்தநாளை எங்கே கொண்டாடியிருக்காருன்னு பாருங்க.. பர்த்டே கிஃப்ட்டாக பாட்டும் ரிலீஸ்!

சென்னை: லக்கி பாஸ்கர் படத்தின் வெற்றிக்குப் பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான காந்தா திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில், ஐ ஆம் கேம், ஸ்ரீ ஸ்ரீ என அடுத்தடுத்த படங்களில் ரொம்பவே கவனம் செலுத்தி வரும் துல்கர் சல்மான் இன்று தனது பிறந்தநாளை ஸ்ரீ ஸ்ரீ படத்தின் செட்டிலேயே கொண்டாடியுள்ளார்.

அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் துல்கர் சல்மான். எஸ் எல் வி சினிமாஸ் ( SLV Cinemas) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் - அந்நிறுவனத்தின் பத்தாவது பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகிறது.

Dulquer Salman celebrates his birthday on the set of Sri Sri Movie

இஷான் சக்சேனா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதன் முறையாக திரையில் இணையும் இத்திரைப்படமானது... காதல் - நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சியான உணர்வுகள் நிறைந்த ஒரு புத்துணர்ச்சி தரும் காதல் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான படப்பிடிப்பு தள காட்சிகள் மற்றும் கண்ணை கவரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை... ரசிகர்களின் மனதை வென்ற நிலையில், தற்போது 'வானே வானே..' எனும் முதல் பாடலை வெளியிட்டு, இப்படத்தின் இசை பயணம் தொடங்கியுள்ளது.

ரயில் நிலையத்தின் இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்கும் துல்கர் சல்மான்- பூஜா ஹெக்டே நடை மேடை( Platform) க்கு நுழையும் தருணத்தில்.. அவரைக் கண்டு முற்றிலும் மெய் மறந்து போவதுடன் இப்பாடல் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் பலருடன் இணைந்து அவர்கள் மேற்கொள்ளும் அழகான பயணத்தின் காட்சிகள் இதமான தொகுப்பாக - மாண்டேஜஸ்ஸாக இடம்பெறுகின்றன.

ஜீ. வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒருமுறை இதமான மற்றும் மனதை மயக்கும் மெல்லிசையை வழங்கி உள்ளார். இந்த பாடலைக் கேட்டவுடன் மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது. இனிமையான இசை அமைப்பு மற்றும் இசைக்கருவிகளின் நேர்த்தியான பயன்பாடு ஆகியவற்றுடன் இந்த பாடல் முதல் முறையிலேயே கேட்பவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கிறது. பாடலாசிரியர் கே. ஆர். தரன்- ஆழமான காதலில் இருக்கும் ஒரு ஆணின் உணர்வுகளை அழகாக பதிவு செய்துள்ளார். கதாநாயகியின் நளினம்- அழகு- அவரை சுற்றியுள்ள மந்திரம் போன்ற வசீகரம் - ஆகியவற்றை கவித்துவமாக விவரித்துள்ளார். பின்னணி பாடகர் நகுல் அபயங்கர் - தனது உணர்வுபூர்வமான மற்றும் வெளிப்பாட்டு திறனுடன் இந்த பாடலை இனிமையான குரலில் பாடி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அதே தருணத்தில் ராம் மாஸ்டரின் நடன அமைப்பும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தப் பாடலின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால்...

சந்தேகத்திற்கு இடமின்றி துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருக்கு இடையிலான இயல்பான மற்றும் கச்சிதமான கெமிஸ்ட்ரி தான். திரையில் அவர்களின் வசீகரமான தோற்றம் மற்றும் இயல்பான புரிதல் ஆகியவை ஒவ்வொரு காட்சியை ரசிக்கும் படியாக மாற்றுகின்றன. அழகான இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள்... காதல் உணர்வை மேலும் மெருகூட்டி, பாடலை இன்னும் ஈர்க்கக் கூடியதாக மாற்றுகின்றன. கவரும் மெல்லிசை - பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு - ரசிக்கத்தக்க நடிப்பு - என அனைத்தும் கொண்ட இந்தப் பாடல்... அடுத்த 'வைரல் ஹிட்' பாடலாக மாறுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழு மிகவும் வலுவானது. அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவையும், ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பையும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பையும் ( Production Designer) மேற்கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலான மற்றும் உணர்வு பூர்வமான ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் இந்திய திரைப்படமாக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படம்- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X