பிரேமம் நடிகருக்கு பெண் குழந்தை பிறந்தது.. பெண் குழந்தைகள் தான் பெஸ்ட் என துல்கர் சல்மான் வாழ்த்து!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சிஜு வில்சன் மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
டிவி நடிகராக அறிமுகமான இவர், நேரம், பிரேமம், வாரனே அவஷ்யமுண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
நடிகர் சிஜு வில்சனுக்கு குழந்தை பிறந்த சந்தோஷ செய்தியை அறிந்த நிவின் பாலி, துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் என மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் சிஜு மற்றும் ஸ்ருதியை வாழ்த்தி வருகின்றனர்.

சிஜு வில்சன்
நடிகரும் தயாரிப்பாளருமான சிஜு வில்சன் அம்ரிதா டிவியில் ஜஸ்ட் ஃபன் சும்மா எனும் தொடர் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர், 2010ம் ஆண்டு வெளியான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் படத்தின் மூலம் மலையாள நடிகராக அறிமுகமானார். லாஸ்ட் பென்ச், நேரம், பிரேமம், ஹேப்பி வெட்டிங், வாரனே அவஷ்யமுண்ட், வசந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ருதியுடன் திருமணம்
கடந்த 2017ம் ஆண்டு ஸ்ருதியை என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சிஜு வில்சன். திருமண வாழ்க்கையை செம ஹேப்பியாக கொண்டாடி வந்த இருவரும் கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் லாக் ஆகி தற்போது க்யூட்டான குழந்தைக்கு பெற்றோர் ஆகியுள்ளனர்.

பெண் குழந்தை
மும்பையில் வசித்து வரும் நடிகர் சிஜு வில்சன் மற்று ஸ்ருதி தம்பதியினருக்கு கடந்த மே 17ம் தேதி தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் அறிவிப்பை மே 18ம் தேதி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். உடனடியாக மலையாள திரையுலகினர் போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்த துவங்கி விட்டனர்.

நிவின் பாலி வாழ்த்து
நேரம், பிரேமம் என நிவின் பாலியின் படங்களில் நடித்துள்ள நடிகர் சிஜு வில்சனுக்கு க்யூட்டான பெண் குழந்தை பிறந்த செய்தியை அறிந்ததும் நடிகர் நிவின் பாலி தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

பெண் குழந்தைகள் தான் பெஸ்ட்
வாரனே அவஷ்யமுண்ட் படத்தில் துல்கர் சல்மான் கானுடன் இணைந்து சிஜு வில்சன் நடித்த நிலையில், துல்கர் சல்மானும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். துல்கர் சல்மான் தனது ட்வீட்டில் "பெண் குழந்தைகள் தான் பெஸ்ட்" என பதிவிட்டு வாழ்த்தி உள்ளது வைரலாகி உள்ளது. மேலும், டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாழ்த்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











