நான் அல்லு அர்ஜூனின் மிகப்பெரிய ரசிகன்.. துல்கர் சல்மான் உற்சாகம்!

சென்னை : நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்தில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இவரது காதல் மற்றும் ஆக்ஷன் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

தற்போது இவரது நடிப்பில் சீதாராமம் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் மம்முட்டியின் மகனாகத்தான் மலையாளத்தில் அறிமுகமானார். ஆனால் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகைகள் காணப்படுகின்றனர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஹே சினாமிகா நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சீதா ராமம் படம்

சீதா ராமம் படம்

இதையடுத்து தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் சீதா ராமம் படம் நாளை மறுநாள் ரிலீசாக உள்ளது. ஹனு ராகவபுடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. படத்தில் ராணுவ வீரராக துல்கர் நடித்துள்ளார். அவருக்கு மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளனர்.

வரவேற்பை பெற்ற ட்ரெயிலர்

வரவேற்பை பெற்ற ட்ரெயிலர்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி சிறந்த விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் துல்கர் ராணுவ வீரராக நடித்துள்ள போதிலும் காதலை மையமாக கொண்டே கதைக்களம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராஷ்மிகாவின் முயற்சி

ராஷ்மிகாவின் முயற்சி

தன்னிடம் கிடைக்கும் ஒரு கடிதத்தை சீதா என்பவரிடம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் ராஷ்மிகா. அதற்காக சீதாவை தேடும் அவர், அது சரியான பலனைக் கொடுக்காத நிலையில், அவரது காதலர் ராமை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். இவ்வாறு இந்த ட்ரெயிலரில் காட்சிகள் காணப்படுகின்றன.

அஃப்ரின் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா

அஃப்ரின் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா

1965ல் நடக்கும் இந்தக் கதை சம காலத்தில் நிறைவடைகிறது. இந்தப் படத்தில் அஃப்ரின் என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். ஒரு கடிதத்திற்காக அவர் மெனக்கெடும் காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் மிருணாள் மற்றும் துல்கரின் நடிப்பும் வித்தியாசமாக காணப்படுகிறது.

 அல்லு அர்ஜுனின் ரசிகன்

அல்லு அர்ஜுனின் ரசிகன்

இந்தப் படத்தின் ப்ரமோஷன்களில் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார் துல்கர் சல்மான். சாக்லேட் பாய் என்ற தன்னுடைய இமேஜை மாற்ற விரும்புவதாகவும் சீதா ராமம் போன்ற காதல் கதைகளில் இன் நடிக்க மாட்டே என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதேபோல தான் தெலுங்கில் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Recommended Video

Dulquer Salmaan| சீதா ராமம் படத்தில் ஹனுமன் ரஷ்மிகா தான் | Sita Ramam Press Meet | *Launch
கேரளாவில் கொண்டாடப்படும் அல்லு அர்ஜுன்

கேரளாவில் கொண்டாடப்படும் அல்லு அர்ஜுன்

மலையாளத்தில் அவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்த துல்கர் சல்மான், அல்லு அர்ஜுன் என்ற அவரது பெயரை மல்லு அர்ஜுன் என்று கூறி அவரை சிறப்பாக வரவேற்று வருவதாகவும் அந்த அளவில் அவரது ஆக்ஷன் படங்களை மலையாள ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X