துல்கர் சல்மானின் காந்தா.. சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை.. கன்ஃபார்ம் ஆன தோல்வி?.. ரிசல்ட் என்ன?

சென்னை: துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் காந்தா. செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கும் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களது நெகட்டிவ் விமர்சனங்களையே அதிகம் முன்வைத்துவருகிறார்கள். இதனை சற்றும் எதிர்பார்க்காத படக்குழு கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். மலையாளம், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படங்கள் தமிழிலும் டப் செய்யப்படுகிறது. இவை மட்டுமின்றி நேரடி தமிழ் படங்களிலும் நடிக்கவே செய்கிறார். அப்படி அவர் நடித்த படங்கள் எல்லாம் வரவேற்பை பெற்றிருக்கின்றன. முக்கியமாக அவருக்கென்று பெண் ரசிகைகள் இங்கு ஏராளமானோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

துல்கரின் காந்தா: சூழல் இப்படி இருக்க செல்வமணி செல்வாஜ் இயக்கத்தில் காந்தா படத்தில் நடித்திருக்கிறார் துல்கர். இதில் அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி, பக்ஸ், வையாபுரி உள்ளிட்டோ நடித்திருக்கிறார்கள். 80களில் இயக்குநருக்கும், நடிகருக்கும் இருக்கும் ஈகோ மோதலும், அதில் யார் வெற்றி பெற்றார் என்பதையும் திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் செல்வமணி.

Dulquer Salman Kaantha Receives Shockingly Negative Reviews on Day 1 Despite Strong Performances
Photo Credit:

எப்படி இருக்கு படம்: படத்தின் ட்ரெய்லர் எல்லாம் ஏகப்பட்ட ஹைப்பை கூட்டியிருந்தது. மேலும் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டிலும் படம் பற்றியும், துல்கர் சல்மானின் நடிப்பு பற்றியும் சமுத்திரகனி உள்ளிட்டோர் ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார்கள். அந்த ஹைப்போடு இன்று ரிலீஸான படத்தை பார்க்க சென்றார்கள் ரசிகர்கள். ஆனால் படம் தங்களை பூர்த்தி செய்யவில்லை என்றும்; லக்கி பாஸ்கர் போன்ற ஹிட் படத்தை கொடுத்துவிட்டு இதில் ஏன் நடித்தாரோ என தெரியவில்லை என்பதுதான் அவர்களுடைய கருத்து.

விருது உறுதி: அதேசமயம் துல்கர் சல்மானின் நடிப்புக்கு குறையில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் காதல், ஏமாற்றம், விரக்தி, ஈகோ என அத்தனையையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக கண்டிப்பாக இப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு விருதினை எதிர்பார்க்கலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. படம் கொஞ்சம் அடி வாங்கினாலும் தனது நடிப்புக்கேனும் பெயர் கிடைத்ததை நினைத்து துல்கர் நிம்மதிப்பட்டுக்கொள்ளலாம்.

நெகட்டிவ் விமர்சனங்கள்: இந்நிலையில் படம் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் அதிகரிக்க தொடங்கியிருக்கின்றன. படம் பார்த்த ஒரு ரசிகர், 'காந்தா திரைப்படத்துக்கு ஓவர் ஹைப் ஏற்றிவிட்டார்கள். படத்தில் அதற்கேற்றபடி ஒன்றும் இல்லை. அதேசமயம் துல்கர் சல்மானின் நடிப்பும், பாக்யஸ்ரீ போர்ஸின் நடிப்பும் நன்றாக இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் சினிமா சம்பந்தமான ஒரு ட்விட்டர் பக்கத்தில், "காந்தா மிகப்பெரிய ஏமாற்றம். டிக்கெட்டெல்லாம் புக் செய்யாதீர்கள். பணம் கொடுத்து செய்யப்படும் விமர்சனங்களை நம்பி போகாமல்; இப்போது அமைதியாகிவிட்டு ஓடிடியில் பாருங்கள்" என்று அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல்தான் பெரும்பாலான ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் காட்சி முடிவதற்குள்ளாகவே இப்படி மோசமான விமர்சனங்கள் வருவது நல்ல சகுனம் இல்லை என்பதால் படக்குழு அச்சத்தில் இருக்கிறது. அநேகமாக அடுத்தடுத்த நாட்களில் படத்துக்கு கூட்டமும் குறைந்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X