தக் லைஃப் படத்துக்கு தண்ணி காட்டிய துல்கர் சல்மான்.. தூக்கி அடிச்சிட்டாரா கமல்ஹாசன்?
சென்னை: இந்தியன் 2 மற்றும் 3 என கமல்ஹாசன் இன்னமும் அந்த படத்தை ஒரு பக்கம் உருட்டிக் கொண்டிருக்கிறார். நாம அடுத்த படத்துக்கு போவோம் என கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தை ஆரம்பித்து ஜெட் வேகத்தில் சூட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.
இந்த படத்தில் ஏற்கனவே மணிரத்னம் படத்தில் நடித்த நடிகர்களை எல்லாம் ஒன்று திரட்டி நடிக்க வைத்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில், ஓகே கண்மணி படத்தில் நடித்த துல்கர் சல்மான் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகி விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
5 படங்கள் கைவசம்: விஸ்வரூபம் 2 ஃபிளாப்பான பிறகு இந்தியன் 2 படத்தை ஆரம்பித்தும் கமல்ஹாசனுக்கு இன்னமும் அந்த படம் முடிந்தபாடில்லை. அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் உள்ளே வந்து விக்ரம் படத்தை எடுத்துக் கொடுத்து கமல்ஹாசனுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்தார். தற்போது இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி, தக் லைஃப், விக்ரம் 3 என பல படங்கள் வரிசைக் கட்டி காத்திருக்கின்றன. சிதம்பரம் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.
பொன்னியின் செல்வனில் குரல்: மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே கமல்ஹாசன் குரல் தான் வந்திருக்கும். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து வந்து பேச முதல் பாகம் வேறலெவலில் ஹிட் அடித்தது.
தக் லைஃப்: மோசமான கொள்ளைக் கூட்டத் தலைவனாக கமல்ஹாசன் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். நாயகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசனை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசன், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லக்ஷ்மி, திரிஷா, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
கேமியோ ரோலில் ஜெயம் ரவி: இந்த படத்தில் ஜெயம் ரவி கேமியோ ரோலில் தான் நடித்து வருகிறார் என தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. வெளிநாட்டில் தொடர்ந்து தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
துல்கர் சல்மான் விலகினாரா?: தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகி விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் துல்கர் சல்மானுக்கு மலையாளத்தில் பல படங்கள் கைவசம் உள்ள நிலையில், தக் லைஃப் படத்திற்கு சரியாக கால்ஷீட் கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக இன்னொரு ஹீரோவை கமிட் செய்யப் போகிறார் மணிரத்னம் என்கின்றனர். துல்கர் சல்மானுக்காக காத்திருக்கலாமா? என மணிரத்னம் கேட்க, பரவாயில்லை, படத்தை சீக்கிரம் முடிங்க ஆளை மாத்திடுங்க என்று கூறினார் கமல் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இதுதொடர்பாக இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











