நடன இயக்குநருடன் துல்கர் இணையும் படம்... ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு
சென்னை : நடிகர் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹே சினாமிகா.
இந்தப் படத்தை பிரபல நடன இயக்குநர் பிருந்தா முதல் முறையாக இயக்கியுள்ளார்.
படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்தப் படம் தமிழில் சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்தில் ஹேக்கராக வரும் அவர், கதாநாயகியால் ஏமாற்றப்படுவதும் பின்பு இருவரும் ஒன்று சேருவதும் என கதை நகரும்.

பிருந்தா மாஸ்டர் இயக்கம்
இந்நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு தமிழில் பிருந்தா மாஸ்டர் இயக்கும் முதல் படமான ஹே சினாமிகா என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த தலைப்பு பிரபல பாடலின் முதல் வரிகளை கொண்டுள்ள நிலையில் அந்தப் படத்திலும் துல்கர்தான் நடித்திருந்தார்.

கோவிந்த் வசந்தா இசை
ஹே சினாமிகா படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தில் அவருடன் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் இருவரும் நடித்துள்ளனர். காதல் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

மார்ச் 3ல் ரிலீஸ்
இந்நிலையில் வரும் மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதத்தின் இறுதியில் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது படம் ஒரு வாரம் தள்ளி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாக்லேட் பாய் லுக்
இந்தப் படத்தின் போஸ்டர்கள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் துல்கர் சாக்லேட் பாய் லுக்கிலேயே காணப்படுகிறார். இதையொட்டி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் வந்தது போல கூலாக கேரக்டரில் அவர் நடித்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரூப் படம்
தமிழில் தொடர்ந்து சாக்லேட் பாய் கேரக்டர்களிலேயே நடித்து வருகிறார் துல்கர். ஆனால் மலையாளத்தில் இவர் நடிப்பில் சமீத்தில் வெளியான குரூப் படம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிகளிலும் இந்தப் படம் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











