என் புருஷன் எனக்கு வேண்டும்.. காஜல் அகர்வாலிடம் கெஞ்சும் அதிதி ராவ்.. ஹே சினாமிகா டிரைலர் ரிலீஸ்!
சென்னை: பிருந்தா மாஸ்டர் இயக்குநராக அறிமுகமாகவுள்ள ஹே சினாமிகா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் வரும் மார்ச் 3ம் தேதி திரைக்கு வருகிறது.
மம்மூட்டி, மகேஷ் பாபு, துல்கர் சல்மான் மற்றும் கார்த்தி தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி டிரைலர்களை வெளியிட்டனர்.

இயக்குநரான பிருந்தா மாஸ்டர்
அனைத்து தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்து நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் மாஸ்டர் என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் நடன இயக்குநர் பிருந்தா, 'ஹே சினாமிகா' திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

தூள் கிளப்பும் துல்கர்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் நடிக்கும் அத்தனை படங்களும் வேற லெவல் ஹிட் அடித்து வருகின்றன. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், குரூப் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஹே சினாமிகா படத்தின் மூலமும் தென்னிந்திய ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்.

ஹே சினாமிகா டிரைலர்
இந்நிலையில், துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நடிப்பில் உருவாகி உள்ள ஹே சினாமிகா டிரைலர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. தமிழ் டிரைலரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். தெலுங்கு டிரைலரை மகேஷ் பாபு வெளியிட, மலையாள டிரைலரை மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளனர்.

முக்கோண காதல் கதை
மீண்டும் ஒரு முக்கோண காதல் கதையை ரசிகர்கள் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் காண உள்ளனர். துல்கர் சல்மானின் மனைவியாக இந்த படத்தில் அதிதி ராவ் நடித்துள்ளார். ஆனால், இருவருக்கும் இடையே எப்போது பார்த்தாலும் பிரச்சனைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில், துல்கரின் தோழியாக காஜல் அகர்வால் நுழைய கிளைமேக்ஸ் என்ன ஆகிறது என்பது தான் ஹே சினமிகா படத்தின் கதை என்பதை டிரைலரே அழகாக சொல்லி உள்ளது.
என் புருஷன் எனக்கு வேண்டும்
துல்கர் சல்மானின் மனைவியான அதிதி ராவ் கணவனை விவாகரத்து செய்ய வேண்டும் என தனது அலுவலக நண்பர்களுடன் பேசும் காட்சிகளில் தொடங்கும் படத்தில் காஜல் அகர்வால் வந்த பிறகு 'I Want My Husband Back' என அதிதி காஜலிடம் கெஞ்சும் காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்கின்றன. பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் ஒரு ஃபீல் குட் ஆன காதல் கதையை ரசிகர்கள் காண உள்ளனர் என்பது கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











