அந்த படத்துக்கு அப்படியொரு பிரச்சனைன்னா.. இந்த படத்துக்கு இப்படியொரு பிரச்சனை.. தவிக்கும் துல்கர்!

திருவனந்தபுரம்: லாக்டவுன் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் இருக்கிறது. துல்கர் சல்மானின் 'குருப்' படத்திற்கும் அதே சிக்கல் தான்.

மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகருமான துல்கர் சல்மானுக்கு தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை உருவாகி வருகிறது.

லாக்டவுனுக்கு முன்னதாக ரிலீசான வாரனே அவசியமுண்ட் திரைப்படத்தை சுற்றி பல பிரச்சனைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

பிளாக்பஸ்டர் ஹிட்

பிளாக்பஸ்டர் ஹிட்

மலையாள திரையுலகில் பல வெற்றி படங்களை குவித்து வரும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. கெளதம் மேனன், ரித்து வர்மா உள்ளிட்டோர் அந்த படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

பெயர் பிரச்சனை

பெயர் பிரச்சனை

கடந்த பிப்ரவரியில் மலையாளத்தில் துல்கர் சல்மான், சோபனா, கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் கோபி, ஊர்வசி நடிப்பில் வெளியான வாரனே அவசியமுண்ட் திரைப்படத்தில், சுரேஷ் கோபி வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்கு ‘பிரபாகரன்' என்கிற பெயர் வைக்கப்பட்டது தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதற்கு துல்கர் சல்மான் மன்னிப்பும் கேட்டார்.

அடுத்த பிரச்சனை

அடுத்த பிரச்சனை

ஒருவழியாக அந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அடுத்த பிரச்சனை உருவாகி நிற்கிறது. இன்று ரிலீஸ் ஆக வேண்டிய ‘குருப்' படம் லாக்டவுன் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போயுள்ளதை நினைத்து அப்செட் ஆகியுள்ளார் துல்கர் சல்மான். ‘குருப் படத்தின் புதிய போஸ்டரை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் சற்று ஆறுதல் தேடியுள்ளார்.

பிரபல தாதா

பிரபல தாதா

கேரளாவை சேர்ந்த பிரபல தாதா சுகுமாரா குருப்பின் வாழ்க்கையை மையப்படுத்தி தான் இந்த குருப் படம் உருவாகி வருகிறது. சுகுமாரா குருப் டான் கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ளார். துல்கர் சல்மானா இது என்று கண்டே பிடிக்க முடியாத அளவுக்கு அவரது தோற்றம் முற்றிலும் சுகுமாரா குருப்பாவாகவே மாறியிருக்கிறது.

Recommended Video

Varane Avashyamund | Dulquer Salman | Quarantine Movie Choice
நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தி பாடி, மேட் இன் ஹெவன் உள்ளிட்ட படங்களில் நடித்த சோபியா துலிபாலா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி வருகிறார். லாக்டவுனுக்கு பிறகு இந்த படம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X