வசூலில் மிரட்டும் துல்கரின் சீதாராமம் கலெக்ஷன்ஸ்.. எவ்வளவுன்னு பார்க்கலாமா?

சென்னை : நடிகர் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் ஆகியோர் நடிப்பில் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது சீதா ராமம்.

தெலுங்கில் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் திரையிடப்பட்டது.

ரசிகர்களின் ஆதரவு இந்தப் படத்திற்கு அதிகமாக உள்ள நிலையில் படத்தின் வசூல் கடந்த 3 நாட்களிலேயே மிரட்டலாக அமைந்துள்ளது.

சீதா ராமம் படம்

சீதா ராமம் படம்

நடிகர் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் ஆகியோர் நடிப்பில் கடந்த 5ம் தேதி ரிலீசாகியுள்ள படம் சீதா ராமம் தெலுங்கில் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகவும் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு இயக்குநரிடம் தங்களது மகிழ்ச்சியை துல்கர், மிருணாள் மற்றும் படக்குழுவினர் பகிர்ந்துக் கொண்டனர். அவரைக் கட்டிப்பிடித்து தங்களது நெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர்.

சிறப்பான கலெக்ஷன்ஸ்

சிறப்பான கலெக்ஷன்ஸ்

இதனிடையே கடந்த 3 நாட்களில் இந்தப் படம் சிறப்பான வசூலை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் கொடுத்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சர்வதேச அளவில் 22 கோடி ரூபாய் கலெக்ஷனை இந்தப் படம் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் மேலும் இந்த வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரொமான்ஸ் நாயகன் துல்கர்

ரொமான்ஸ் நாயகன் துல்கர்

காதல் மற்றும் ரொமான்சில் எப்போதுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் துல்கர் சல்மான். இவரது காதல் படங்கள் எப்போதுமே சிறப்பான வெற்றியை கொடுக்கும். அந்த வகையில் இந்தப் படத்திலும் காதலில் மிகவும் சிறப்பான ஆக்டிங்கை கொடுத்துள்ளார். தான் ஏற்றுக் கொண்ட ராம் என்ற கதாபாத்திரமாகவே மாறியுள்ளார்.

சிறப்பான கேரக்டர் தேர்வு

சிறப்பான கேரக்டர் தேர்வு

ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் போன்றவர்களும் படத்தின் சிறப்பான கதைத்தேர்வு. தெலுங்கில் கடந்த சில மாதங்களாக மிகவும் பிரம்மாண்டமான படங்கள் வந்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், சிறப்பான கதை மற்றும் காட்சி அமைப்புகளால் ரசிகர்களை கவர முடியும் வசூல் வேட்டை செய்ய முடியும் என்பதை ஹனு ராகவப்புடி நிரூபித்துள்ளார்.

சிறப்பான அனுபவம்

சிறப்பான அனுபவம்

மொத்தத்தில் 80 மற்றும் 60களில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் அந்த பழைய காலகட்டத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது. ரசிகர்களை மிகவும் சிறப்பாக கவர்ந்துள்ளது. துல்கர் சல்மானை இதுபோன்ற காதல் நாயகனாக பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்தப் படம் அவர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X