Kaantha Day 1 Box Office - காந்தா படத்துக்கு செம அடி.. துல்கர் சல்மான் பாவம்.. முதல் நாள் வசூல் தெரியுமா?

சென்னை: துல்கர் சல்மான், சமுத்திரகனி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் காந்தா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பீரியட் ஜானரில் வந்திருக்கும் இப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. வசூல் ரீதியாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் அதன் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியிருக்கிறது.

மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் தற்போது செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் காந்தா படத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்ததோடு மட்டுமில்லாமல் இப்படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். இதற்கு முன்பு நடித்திருந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருந்தது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் எப்படி இருக்கு?: அதன் காரணமாக இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் இதன் மீது துல்கர் சல்மானும் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருந்தார். நேற்று ரிலீஸான இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள். ஈகோவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தில் சில சீன்களை தவிர்த்து மற்ற சீன்கள் ஒரு வேல்யூவே இல்லை என்றும், திரைக்கதை ஏகப்பட்ட இடத்தில் தொய்வடைந்திருப்பதாகவும் நெகட்டிவ் விமர்சனத்தையே அதிகம் கொடுத்துவருகிறார்கள்.

Dulquer Salman s Kaantha Day 1 Box Office Collection is 4 Crores only in India
Photo Credit:

முதல் நாளே இப்படியா?: சொல்லப்போனால் படத்தின் முதல் காட்சியின் முதல் பாதி முடிந்ததுமே நெகட்டிவ் பேச்சுக்கள் வர தொடங்கின. அவை அனைத்தும் முதல் காட்சி முடிந்த பிறகு மும்மடங்காகி பரவிவிட்டது. இப்படி எடுத்ததுமே இத்தனை நெகட்டிவ் விமர்சனங்களை சோஷில் மீடியாவில் படக்குழு சந்தித்தது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவுமே அப்செட்டில் இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

துல்கருக்கு சூப்பர்: படம் இப்படி விமர்சனங்களை சந்தித்தாலும் துல்கர் சல்மான் நடிப்புக்கு கைத்தட்டல்கள் கிடைத்திருக்கின்றன. நிச்சயம் இப்படத்தில் நடித்ததற்காக ஏகப்பட்ட விருதுகளை வெல்வார் எனவும் ஆரூடம் கூறுகிறார்கள். அதேபோல் ஹீரோயின் பாக்யஸ்ரீ போர்ஸும் தனது பங்கை சூப்பராக கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அவரது மார்க்கெட் இந்தப் படத்துக்கு பிறகு இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சமுத்திரகனியும் தனது கேரக்டரை அவ்வளவு அருமையாக செய்திருந்தார்.

படத்தின் வசூல்: இப்படி நடிகர்களின் நடிப்பு மட்டும்தான் படத்துக்கு ஆறுதலாகவும், ப்ளஸ்ஸாகவும் இருக்கின்றன. இந்நிலையில் காந்தா திரைப்படம் முதல் நாள் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, இப்படம் இந்தியாவின் முதல் நாளில் வெறும் நான்கு கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறதாம். உலக அளவில் ஏழு கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் நாளில் இவ்வளவு மோசமான சந்தித்திருக்கும் காந்தா இனி வரும் நாட்களில் பிக்கப்பாகி துல்கர் சல்மானுக்கு லாபத்தை கொடுக்குமா இல்லை நஷ்டத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X