படம் பேரு சாந்தா இல்லை.. காந்தா.. இதுக்கு மேல பர்த்டே ட்ரீட் கொடுக்க முடியாது.. துல்கர் சல்மான் செம!

சென்னை: செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் காந்தா படத்தின் டீசரை துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு சற்றுமுன் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஜூலை மாதம் வரிசையாக சூர்யா, தனுஷ், துல்கர் சல்மான் என டாப் நடிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.

பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட்களை முன்னணி நடிகர்கள் கொடுத்து வருகின்றனர். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு டீசர் வெளியானது. தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியான நிலையில், தற்போது துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா டீசர் வெளியாகி இருக்கிறது.

Dulquer Salman s perfect birthday gift Kaantha Teaser out now
Photo Credit:

ரத்தக்கண்ணீர் எம்.ஆர். ராதாவின் பயோபிக் போல காந்தா படம் இருக்கும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், கிளாசிக் சினிமா காலத்துக்கே சென்று ஒரு தரமான சம்பவத்தை செய்ய துல்கர் சல்மான் முடிவு செய்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

மம்மூட்டி மகன் பிறந்தநாள்: 75 வயதிலும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல நல்ல படங்களை தயாரித்து ஹீரோவாக மாஸ் காட்டி வரும் மம்மூட்டியின் மகன் வருடத்துக்கு ஒரு படம் அல்லது 2 வருடத்துக்கு ஒரு படம் பண்ணாலும் லக்கி பாஸ்கர் போல தரமான படங்களை கொடுத்து வரும் துல்கர் சல்மானின் 42வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசித்து வரும் துல்கர் சல்மான் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழி என கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Dulquer Salman s perfect birthday gift Kaantha Teaser out now
Photo Credit:

காந்தா டீசர் எப்படி இருக்கு?: துல்கர் சல்மானுக்கும் சமுத்திரகனிக்கும் இடையே நடக்கும் ஈகோ வார் தான் காந்தா படத்தின் கதை என்பதை டீசரிலேயே நறுக்கென காண்பித்து விட்டனர். துல்கர் சல்மான் பிறந்தநாள் என்பதற்காக வெறும் துல்கர் சல்மான் காட்சிகளை மட்டும் காட்டாமல், படத்தின் மையக் கருவை டீசராக வெளியிட்டு சினிமா ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் துல்கர் சல்மான். பிளாக் அண்ட் ஒயிட் படங்களின் ஹீரோவுக்கும் இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒன்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளனர் என்பது டீசரை பார்த்தாலே தெரியும் வண்ணம் தெளிவாக கட் செய்துள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக காத்திருக்கிறது.

சமுத்திரகனி நடிப்பு வேறலெவல்: துல்கர் சல்மானுக்கு போட்டியாக படம் முழுக்கவே சமுத்திரகனி பக்காவாக ஸ்கோர் செய்துள்ளார். தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சமுத்திரகனிக்கு துல்கர் சல்மான் உடன் நடிக்க வேண்டும் என்றால் அல்வா சாப்பிட்ட கதையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவும் நீ தான் ஹீரோயினும் நீ தான் என சாந்தா என தலைப்பில் படமெடுக்க, கடைசியாக அந்த படத்தை சாந்தா இல்லை காந்தா என துல்கர் சல்மான் மாற்றும் இடமும் சினிமாவில் ஹீரோக்களின் தலையீடு அந்த காலத்திலேயே எப்படி இருக்கிறது பாருங்க, இப்போதும் அதைத்தான் ஹீரோக்கள் செய்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டும் படமாகவே இந்த காந்தா வர காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X