காஜல் அகர்வாலுடன் கொள்ளை அடிக்கப் போகிறாரா துல்கர்? அடுத்த படம் ஆரம்பம்.. இயக்குநர் யார் தெரியுமா?

சென்னை: துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படமாக கருதப்பட்டு வருகிறது.

Recommended Video

Sandy Man குத்தாட்டம் Dance Studio Inaguration | Sherin | DD | Tharshan | Kala Master

இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில், அரங்கேறியது.

பிரபல நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர், இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

ரெண்டு ஹீரோயின்

ரெண்டு ஹீரோயின்

காஜல் அகர்வால் மட்டுமின்றி, நடிகை அதிதி ராவ் இந்த படத்தில் துல்கருடன் இணைந்து நடிக்கிறார். இன்று நடைபெற்ற படத்தின் பூஜையில், காஜல் அகர்வால் கலந்து கொள்ளவில்லை. ஆனால், நடிகை அதிதி ராவ் கலந்து கொண்டார். துல்கர் சல்மானின் அடுத்த படத்திற்கான பூஜை போட்ட புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

என்ன டைட்டில்?

என்ன டைட்டில்?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் "ஹேய் சினாமிகா.. சீரும் சினாமிகா.. நீ போனால் கவிதை அனாதிகா" என்ற பாடல் வரிகளில் இருந்து ஹேய் சினாமிகா என்ற வார்த்தையை இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள பிருந்தா மாஸ்டர் துல்கரின் புதிய படத்துக்கு வைத்துள்ளார்.

பிளாக்பஸ்டர்

பிளாக்பஸ்டர்

2020ம் ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே, அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படமாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து, துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. கோலிவுட் ரசிகர்களை இந்த படத்தில் செம திருப்தி செய்துள்ள துல்கரின் அடுத்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இயக்குநர் அவதாரம்

இயக்குநர் அவதாரம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், மோகன் லால், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சூர்யா என தென்னிந்திய சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களுக்கு பல படங்களில் நடன அசைவுகளை அமைத்துக் கொடுத்துள்ள நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர், துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் உருவாகும் ஹேய் சினாமிகா படத்தின் மூலம் இயக்குநராகவும் கலக்க உள்ளார்.

மணிரத்னம்

மணிரத்னம்

இன்று நடைபெற்ற ஹேய் சினாமிகா பட பூஜையில், இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் பாக்கியராஜ், துல்கர் சல்மான், அதிதி ராவ், நடிகை சுஹாசினி, குஷ்பு, மதன் கார்க்கி, கோவிந்த் வசந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்தவுடன் இந்த படத்தின் ஷூட்டிங்கில் காஜல் அகர்வால் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ ஸ்டூடியோஸ்

ஜியோ ஸ்டூடியோஸ்

பாலிவுட் உலகை கலக்கி வரும் ஜியோ ஸ்டூடியோஸ், தனது முதல் தமிழ் திரைப்படமாக ஹேய் சினாமிகா படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாக உள்ள இந்த படம், நிச்சயம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ரசிகர்களை கவரும் விதமாக வித்தியாசமாக உருவாகும் என்றே தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X