இளைஞர்களுக்கான கதை "டம் டீ"... பாப்பிசை புகழ்பரப்பும் ஜாலி படம்!

By Shankar

Dum Tea
டம் டீ என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகி வருகிறது தமிழில். இந்தப் படத்தின் விசேஷம்... படம் முழுக்க முழுக்க பாப் இசைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்படுவதுதான்.

சிங்கப்பூர் இளைஞர்கள் சிலர் ஒன்றுபட்டு சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய பாப்பிசைக் குழு மமி பாய்ஸ்.

மேடை நிகழ்ச்சிகள், பாப் ஆல்பம்,குறும்படம்,திரைப் படங்களில் பாப்பிசை பங்களிப்பு என்று இயங்கிவந்த மமி பாய்ஸ் நிறுவனம் இப்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

அந்தப் படம்தான் "டம் டீ" படப்பிடிப்பு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. அதற்கு முன்னோட்டமாக "Dum Tea " என்கிற பெயரில் இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் ஆல்பமாக வெளியாகியுள்ளது. இதில் ஏழு பாடல்கள் உள்ளன.

'டம் டீ' யின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஏவிஎம் ஸ்டுடியோவில் நேற்று நடந்தது. டம் டீ படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரேடியோ ஜாக்கி தீனா கலந்து கொண்டு வெளியிட்டு குழுவினரை வாழ்த்தினார்.

'டம் டீ' யில் இயக்குநர் க்ரிஷேனோடவும் முக்கிய பாத்திரம் மேற்று நடித்துள்ளார். அவர் தவிர கெவி.ஜே, பார்டி நாயகர்களாக நடிக்கிறார்கள். தாங்கள் நிஜத்தில் சந்தித்த மாதிரியான முகவெட்டுள்ள நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

'டம் டீ' படம் பற்றி இயக்குநர் க்ரிஷேனோவிடம் கேட்ட போது, "டென்ஷனில் மனச்சோர்வில் இருக்கும்போது இளைஞர்கள் இரண்டு விஷயங்கள் செய்வாங்க. ஒன்று ஒரு டீ சாப்பிடுவார்கள். இல்லைன்னா ஒரு தம் அடிப்பார்கள். தம் அடிச்சாலும் டீ அடிச்சாலும் ரிலாக்சேஷனா இருக்கும்னு நினைக்கிறாங்க... அதுபோல இந்த 'டம் டீ' படமும் இளைஞர்களுக்கு பெரிய ரிலாக்சேஷனா இருக்கும்.

நான் தமிழில் உலக அளவுல பாப் ஆல்பம் கொண்டு வரனும்னு நினைச்சேன்.

"டம் டீ" ஒரு ஜாலியான யூத்புல்லான படமாக இருக்கும். இதில் இளைஞர்களின் பிரச்சனைகள், கஷ்டங்களை சொல்லியிருக்கோம். ஆனால் ஜாலியா காமடியா சொல்லியிருக்கோம். இந்த படத்துகான கதை என்ன தெரியுமா? ஒரு தமிழ் இசைக்குழு இசைப் பயணம் செய்யும் போது சந்திக்கிற பிரச்சனைகள் தடைகள், போராட்டங்கள்தான் கதை. இடையில் சந்திக்கும் பெண்கள், காதல் பற்றியும் கதை பேசும். இந்தப் படத்தின் கதைக்கு நாங்கள் சிரமப் படவில்லை. நாங்கள் சந்திச்ச அனுபவங்களோட தொகுப்புதான் இந்தப்படம்...," என்கிறார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் க்ரிஷேனோ. ஒளிப்பதிவு ஆஞ்சாய் சாமுவேல். இசை - ஜூடு நிரஞ்சன். தயாரிப்பு எம்.பாய்ஸ் ரிக்காம்ட்ஸ் மற்றும் மமி பாய்ஸ் நிறுவனம்.

பாப்பிசையின் புகழ்பரப்பும் வகையில் இளமை காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படம் முதல் கட்டத்தை எட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X