மனைவியை விவாகரத்து செய்யும் கன்னட நடிகர் விஜய்
பெங்களூர்: கன்னட நடிகர் துனியா விஜய் தனது மனைவி நாகரத்னாவை விவகாரத்து செய்கிறார்.
துனியா என்ற கன்னட படம் மூலம் பிரபலமானவர் விஜய். அதில் இருந்து அவர் பெயர் துனியா விஜய் என்றாகிவிட்டது. அவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு நாகரத்னா என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். துனியா விஜய் குடும்பத்தில் பிரச்சனை என்று அண்மை காலமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அவர் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர், நாகரத்னா தனது பெற்றோரை ஒழுங்காக கவனித்துக் கொள்வதில்லை என்றும், தனக்கு மென்ட்டல் டார்ச்சர் தருவதாவும் அவர் தெரிவித்துள்ளதாக டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விஜய்க்கும், பிரபல கன்னட நடிகையான சுபா பூஞ்சாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதால் தான் அவர் விவகாரத்து செய்கிறார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.

சுபா பூஞ்சாவுடன் தொடர்பு
துனியா விஜய் சுபா பூஞ்சாவை டேட் செய்தார் என்றும், அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் என்றும் பேச்சாகக் கிடந்தது. இந்நிலையில் அவர் விவகாரத்து கோரியதும் மீடியாக்கள் சுபாவை சந்திக்க சென்றன.

விவாகரத்தா, எனக்கு எதுவும் தெரியாதே!
விஜய் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தது எனக்கு தெரியாது. அவர் தனது மனைவியைப் பிரிவதற்கு நான் காரணம் அல்ல. நானும் அவரும் சேர்ந்து சில படங்களில் நடித்துள்ளோம் அவ்வளவு தான் என்றார் சுபா.

விஜயும், மனைவியும் ஒன்று சேரட்டும்
விஜயும், அவரது மனைவியும் தங்களுக்கு இடையேயான பிரச்சனைகளைத் தீர்த்து ஒன்றாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று சுபா தனது விருபத்தை தெரிவித்துள்ளார்.

தமிழுக்கு வரும் விஜய்
தமிழ் இயக்குனர் அரவிந்தன் இயக்கத்தில் துனியா விஜய் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 3 மொழிகளில் எடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











