பிரபல நடிகரின் 2வது மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவான முதல் மனைவி

By Siva

Recommended Video

பிரபல நடிகரின் மனைவிகளுக்குள் சண்டை- வீடியோ

பெங்களூரு: கன்னட நடிகர் துனியா விஜய்யின் 2வது மனைவியை தாக்கிய முதல் மனைவி தலைமறைவாகியுள்ளார்.

பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்க்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியான நாகரத்னா குழந்தைகள் மோனிகா, மோனிஷா, சாம்ராட் ஆகியோருடன் கதிரிகுப்பே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

விஜய் தனது இரண்டாவது மனைவி கீர்த்தி கவுடாவுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.

தாக்குதல்

தாக்குதல்

ஜிம் டிரெய்னரை தாக்கிய வழக்கில் துனியா விஜய் கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து நாகரத்னா விஜய்யின் வீட்டிற்கு சென்று தங்களின் கணவர் கைதுக்கு கீர்த்தி தான் காரணம் என்று கூறி அவரை தாக்கியுள்ளார். தனது செருப்பை கழற்றி அவர் கீர்த்தியை தாக்கிவிட்டு சென்றுள்ளார்.

புகார்

புகார்

நாகரத்னா தன்னை தாக்கியதாக கீர்த்தி போலீசில் புகார் அளித்தார். கீர்த்தி தன்னை தாக்கியதாக நாகரத்னாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் நாகரத்னா கீர்த்தியை தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த போலீசார் தானாக வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்த நாகரத்னாவின் வீட்டிற்கு சென்றனர்.

அம்மா

அம்மா

போலீசார் வந்ததை பார்த்த மூத்த மகள் மோனிகா கதவை திறக்க மறுத்தார். அந்த நேரத்தில் நாகரத்னா தப்பியோடிவிட்டார். போலீசார் வீட்டிற்குள் சென்றபோது நாகரத்னா இல்லை. தலைமறைவாக உள்ள நாகரத்னாவை போலீசார் தேடி வருகிறார்கள். விசராணைக்கு ஒத்துழைக்காத மோனிகா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று விஜய் போலீசாரை கேட்டுக் கொண்டார்.

மனைவிகள்

மனைவிகள்

மோனிகாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு கீர்த்தியும், விஜய்யும் கேட்டதாகவும் அதற்கு நாகரத்னா மறுத்ததாகவும் கூறப்படுகிறது. மகளை யார் கட்டுப்பாட்டில் வைப்பது என்பது தொடர்பாக இரண்டு மனைவிகளுக்கு இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக அப்பாவும், சித்தி கீர்த்தியும் தன்னை தாக்கியதாக மோனிகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X