Dunki Blue Sattai Maran Review: "வடிவேலு காமெடி மாதிரி குப்பை..” டங்கி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள டங்கி திரைப்படம் நேற்று வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள டங்கி, முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் டங்கி படத்தின் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் வெளியாகியுள்ளது.
டங்கி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
ஷாருக்கான் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டங்கி திரைப்படம் நேற்று வெளியானது. முன்னாபாய் MBBS, 3 இடியட்ஸ், PK போன்ற படங்கள் மூலம் பிரபலமான ராஜ்குமார் ஹிரானி டங்கி படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் டங்கி படத்திற்கு நெகட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளார் ப்ளு சட்டை மாறன். இந்தப் படத்தின் கதையே சுவாரஸ்யம் இல்லை என்பதாகக் கூறியுள்ளார்.

அதாவது, "டங்கி படத்தோடு கதைய பத்தி பார்த்தோம்னா, ஹீரோவுக்கு தன்னோட காதலி டாப்ஸி உட்பட நாலு நண்பர்கள். இவங்க எல்லோருக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக லண்டனுக்கு போகணும்னு ஒரு கட்டாயம் இருக்கு. அதுக்காக இவங்க சட்டப்பூர்வமா எடுக்குற முயற்சி எல்லாமே தோல்வியடைஞ்சுட்டு வருது. அந்த நேரத்துல ஷாருக்கானோட நண்பர் ஒருத்தர் மனசு உடைஞ்சு தற்கொலை பண்ணிடுறாரு."
“இதனால அதிரடியா முடிவு எடுக்குற ஹீரோ ஷாருக்கான், தன்னோட நண்பர்கள் கிட்ட உங்க எல்லாரையும் எப்படியாவது லண்டன்ல கொண்டு போய் சேர்த்துடுறேன்னு சொல்றார். சொன்னபடி தன்னோட நண்பர்கள கூட்டிட்டு ஷாருக்கான் லண்டன் போய் சேர்ந்தாரா இல்லையாங்குறது தான் கதை” என ப்ளூ சட்டை மாறன் விவரித்துள்ளார். அதன் பின்னர் தான் டங்கி படத்தை டார் டாராக கிழித்து தொங்கவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
அதாவது, டங்கி படத்தை பார்க்க அதிக ஆர்வம் காட்டியது ஷாருக்கானுக்காக கிடையாது. ஏனென்றால் அவர் ஏற்கனவே கொடுத்த பதான், ஜவான் மாதிரியான படங்கள் எடுத்து க்ரைம் ரேட் கூடினதால தனக்குத் தானே ரெட் கார்டு கொடுத்துக்கிட்டார். இந்தப் படத்த முக்கியமா பார்க்கப் போனதுக்கு காரணம், 3 இடியட்ஸ், பிகே போன்ற தரமான படங்கள் கொடுத்த ராஜ்குமார் ஹிரானிக்காக தான்.
அவரோட படங்கள்ல நல்ல ஆழமான கருத்தும் நல்ல ஒரு காமெடியோட சூப்பரான யூனிவர்ஸெல் ஸ்க்ரிப்ட்டா இருக்கும். அதனால தான் அவரோட படங்கள் எந்த மொழிகள்ல ரீமேக் பண்ணாலும் நல்லா ஓடிச்சு. அந்த மாதிரியான படமா டங்கி இருக்குதான்னு கேட்டா... நிச்சயமா இல்லைன்னு தான் சொல்லணும். அதுக்கு முக்கியமான காரணமே கதை, திரைக்கதை ரெண்டுமே அழுத்தமா இல்ல என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
முக்கியமா படத்துல எந்த எமோஷனல் சீன்ஸ்ஸும் கனெக்ட் ஆகவே இல்ல. உதாரணமா ஹீரோவோட நண்பர் தற்கொலை பண்ற சீன்ல, எல்லாரும் கதறி அழுகுறாங்க. ஆனா அது ரசிகர்கள் கிட்ட எந்த பாதிப்பும் ஏற்படுத்தல. அதேமாதிரி ஹீரோவும் அவரோட நண்பர்களும் எவ்ளோ கஷ்டப்பட்டு லண்டன் போறாங்கன்னு காட்டுறாங்க. ஆனா அதெல்லம் பார்க்க முடியாம அவங்கள விட நாம தான் ரொம்ப கஷ்டப்படுறோம். இந்த காட்சிகள் எதுவுமே சரியா ஒர்க் அவுட் ஆகல.
அதேமாதிரி 25 வருசத்துக்கு முன்னால ஹீரோவும் ஹீரோயினும் எப்படி லவ் பண்ணாங்கன்னு சொல்றாங்க. ஆனா அதெல்லாம் ஸ்க்ரீன்ல பார்க்கும் போது பழைய காதல் கோட்டை படம் பாக்குற மாதிரி இருக்கு. முக்கியமா க்ளைமேக்ஸ் சீன்ஸ்லாம், வடிவேலு காமெடில சொல்ற மாதிரி படத்த ரொம்ப குப்பையா எடுத்து வச்சிருக்காங்க. படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே பார்க்கும்படி உள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். ஒட்டுமொத்தமா ராஜ்குமார் ஹிரானியிடம் இருந்து இப்படியொரு படத்தை எதிர்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











