Dunki Box Office Day 3: பிரபாஸிடம் சரணடைந்த ஷாருக்கான்... டங்கி மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்
சென்னை: ஷாருக்கான் நடிப்பில் இந்தாண்டு மொத்தம் மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. அதில் இந்த வாரம் 21ம் தேதி வெளியான டங்கி படத்துக்கு பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் பிரபாஸின் சலார் படத்திடம் சரணடைந்துள்ளது டங்கி. பதான், ஜவான் படங்கள் அளவுக்கு டங்கி வசூல் சாதனை செய்யவில்லை என்றே சொல்லப்படுகிறது.
டங்கி மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்
பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கு இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல் எனலாம். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஒரே ஆண்டில் அவர் நடித்த 3 படங்கள் ரிலீஸாகியுள்ளன. ஜனவரி மாதம் வெளியான பதான் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான ஜவான் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய் வசூலித்தது.

இதில் ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் 21ம் தேதி ஷாருக்கானின் டங்கி திரைப்படம் வெளியானது. முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. அவரது இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ளதால் டங்கி படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஷாருக்கானின் ஹாட்ரிக் வெற்றியை கொண்டாட அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஷாருக்கானுடன் டாப்ஸி, விக்கி கௌஷல், போமன் இரானி ஆகியோர் டங்கி படத்தில் நடித்திருந்தனர். ராஜ்குமார் ஹிரானி வழக்கம் போல காமெடி, எமோஷனல், சென்டிமென்ட், சோஷியல் மெசேஜ் என கமர்சியலாக டங்கி படத்தை இயக்கியிருந்தார். ஷாருக்கான் தனது நண்பர்களுடன் இங்கிலாந்து செல்ல முயற்சிப்பது தான் படத்தின் கதை என்றாலும், அது சொன்ன விதத்தில் அழுத்தம் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதேபோல், பதான், ஜவான் போல டங்கி படத்துக்கு சிறப்பான ஓபனிங்கும் அமையவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி உட்பட மற்ற மொழிகளிலும் சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளது. அதன்படி, டங்கி முதல் நாளில் 30 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து. இது ஷாருக்கான் படங்களுக்கான பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதான் திரைப்படம் முதல் நாளில் 57 கோடியும். ஜவான் 75 கோடி வரையும் கலெக்ஷன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டங்கி படத்தின் இரண்டாவது நாள் வசூல் 32 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்றாவது நாளில் 35 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தம் 3 நாட்களில் 103 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது டங்கி. இதனை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக 22ம் தேதி பிரபாஸின் சலார் திரைப்படம் வெளியானதும் டங்கி வசூல் குறைய காரணம் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம் ஷாருக்கான் - பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டைப் போட்டு வருகின்றனர். அதில் பாக்ஸ் ஆபிஸில் ஷாருக்கானின் டங்கி, பிரபாஸின் சலாரிடம் சரணடைந்துவிட்டதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











