Dunki Teaser: ஹாட்ரிக் 1000 கோடிக்கு ரெடி பண்ண ஷாருக்கான்.. டன்கி டீசர் எப்படி இருக்கு?

சென்னை: முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்துள்ள டன்கி படத்தின் டீசர் தற்போது வெளியானது.

பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் அட்லி இயக்கத்தில் வெளியாகி 1100 கோடி வசூல் செய்த ஜவான் திரைப்படம் இன்று முதல் ஸ்ட்ரீமாகி வருகிறது.

Dunki Teaser out now and Shah Rukh Khan ready for hatrick 1000 crores at Box Office

டன்கி டீசர் ரிலீஸ்: இந்நிலையில் அடுத்த பிறந்தநாள் ட்ரீட்டாக டன்கி டீசரை ராஜ்குமாரி ஹிரானி தற்போது வெளியிட்டுள்ளார். அவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எல்லாமே பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், டன்கி டீசரைப் பார்த்தாலே இந்த படம் வித்தியாசமாகவும் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அமையும் என தெரிகிறது.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்சி பண்ணு நடித்துள்ளார். மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர் விக்கி கௌசல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குடும்பம், காமெடி, தீவிரவாதம் உள்ளிட்ட பல விஷயங்களை ஒரே டீசருக்குள் அடக்கி வரும் கிறிஸ்துமஸ்க்கு மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளனர்.

ஹாட்ரிக் 1000 கோடி: இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான பதான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் ஈட்டிய நிலையில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த ஜவான் திரைப்படம் 1100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள டன்கி திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் 1000 கோடியை அடிக்க ஷாருக்கான் ரெடியாகி விட்டாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

3 வருஷம் சினிமாவுக்கு பிரேக் விட்ட ஷாருக்கான் இப்படி ஒரே வருஷத்தில் 3 பெரிய படங்களை கொடுத்து பாலிவுட்டை ஒட்டுமொத்தமாக தூக்கி நிறுத்தியிருப்பது வேறலெவல் சாதனை என்றும் தீபாவளிக்கு வெளியாக உள்ள சல்மான் கானி டைகர் 3 படமும் 1000 கோடி வசூல் செய்தால் இந்த ஆண்டு பாலிவுட் திரையுலகுக்கு பொன்னான ஆண்டு என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X