Leader First Review: லெஜண்ட் சரவணனின் லீடர் முதல் விமர்சனம்.. அடேங்கப்பா இப்படி ஒரு விமர்சனமா?

சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்துள்ள படம் லீடர். கருடன் என்ற அட்டகாசமான படத்திற்கு பின்னர் இயக்குநர் துரை செந்தில் குமாரின் இயக்கத்தில் உருவாகி உள்ள லீடர் படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இயக்குநர் துரை செந்தில் குமார் அடிப்படையில் இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர். இதற்கு முன்னதாக, சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல், காக்கி சட்டை, தனுஷின் கொடி, பட்டாஸ், சூரியின் கருடன் என ஐந்து படங்களை இயக்கி உள்ளார். அதேபோல் வெற்றி மாறனின் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களிலும் இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமான கருடன் படத்திற்கு பின்னர் லெஜண்ட் சரவணனை வைத்து லீடர் படத்தை உருவாக்கி உள்ளார். லெஜண்ட் சரவணன் இதற்கு முன்னர் லெஜண்ட் படத்தில் மட்டும் நடித்துள்ளார். அதன் பின்னர் அவர் தயாரித்து நடிக்கும் படம் என்றால் அது இந்த படம் தான். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் என இரண்டுமே அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக வெளியாகி உள்ளது.

Durai Senthilkumar Legend Saravanan Leader First Review
Photo Credit:

வெற்றி மாறன் - தனுஷ் விமர்சனம்: இதனால் படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று படக்குழுவினர் தொடங்கி பலரும் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இயக்குநர் துரை செந்தில் குமாருக்கு மிகவும் நெருக்கமான வெற்றிமாறன் மற்றும் தனுஷ் என இருவரும் படத்தைப் பார்த்துள்ளனர். படத்தை பார்த்த இருவருமே படத்தை பாராட்டி உள்ளனர். குறிப்பாக ஓவராக நம்பத்தகாத காட்சிகளை வைக்காமல், நம்பத்தகுந்த காட்சிகளை வைத்து படத்தின் திரைக்கதையை உருவாக்கிய விதம் சிறப்பு என்று பாராட்டி உள்ளனர். நிச்சயம் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஜிப்ரான் பாராட்டு: அதேபோல் படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குநர் துரை செந்தில் குமாருக்கு போன் செய்து படத்தை பாராட்டி உள்ளார். அதுவும் படத்தை அரைமணி நேரத்திற்கும் மேலாக படத்தையும் படத்தின் சில காட்சிகளையும் பாராட்டினாராம். வெற்றிமாறன், தனுஷ், ஜிப்ரான் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் பாராட்டியது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X