Leader Trailer: எமோஷன் + மிஸ்ட்ரி.. ஆக்‌ஷனில் மிரட்டிவிட்ட லெஜண்ட்.. முரட்டு டிரைலர்

சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள லீடர் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மார்ச் 29ஆம் தேதி நடைபெற்றது. படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் படத்தில் ஆக்‌ஷன் டீசரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே வெளியான படத்தின் டைட்டில் டீசரின் அடுத்த வெர்ஷனை ஆக்‌ஷன் டீசராக படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன், எமோஷன், மிஸ்ட்ரி என மொத்த ஆக்‌ஷன் டீசருமே நன்றாக உள்ளது என்று ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஏற்கனவே டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி பாராட்டுக்களை பெற்றது. அதேபோல் ரசிகர்களை ஆக்‌ஷன் டீசரும் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலைப்புலி தாணு, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் மூத்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Durai Senthilkumar s Leader Action Trailer Impresses Fans Ahead of April 3 Release
Photo Credit:

ஏற்கனவே, லீடர் என்ற டைட்டிலைப் பார்த்ததும் பலரும் இது அரசியல் படமாக இருக்குமோ என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இது தொடர்பாக லெஜண்ட் சரவணன் கூறுகையில், " லீடர் படத்தின் டைட்டிலை பார்த்ததும் பலரும் இதை அரசியல் படம் என்று நினைக்கலாம். ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியோ, ஒரு வசனமோ கூட அரசியல் இல்லை. படம் முழுக்க சிறப்பான ஆக்‌ஷன் படமாகவும் கமர்ஷியல் படமாகவும் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர். இந்த காலத்தில் ரசிகர்களைப் பொறுத்தவரையில் கமர்ஷியல் படமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அல்லது சமூகத்திற்கு கருத்து சொல்லும் படமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதைப் புரிந்து கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

படக்குழு: லீடர் படத்தில் லெஜண்ட் சரவணன் உடன் இணைந்து, ஷியாம், லால், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பயல் ராஜ்புத், பிரபாகரன், அமிர்தா ஐயர், VTV கணேஷ், இயல், ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், நிஷா, "ஆதித்யா" கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லெஜண்ட் சரவண்ன் படத்தை தயாரித்து நடித்துள்ளார். ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X