ஹீரோ.. வில்லன்.. குணசித்திர கதாபாத்திரம் என கலக்கும் துரை சுதாகர் !

சென்னை : 'களவாணி2 படத்தில் அரசியல்வாதியாக வந்து வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கிய துரை சுதாகர், டேனி படத்தில் காவல்துறை அதிகாரியாக வந்து மிரட்டி இருக்கிறார்.

Recommended Video

Dhanush Karnan Shooting Spot | Mari Selvaraj | Djhanush 41

சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் வரலட்சுமிக்கு இணையான கதாபாத்திரத்தில் சிறிதும் பிசகாமல் கனகச்சிதமாக பொருந்தி நடித்துள்ளார் சுதாகர்.

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் டேனி திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு செய்து

புலனாய்வு செய்து

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் துரை சுதாகர், கொலை குறித்து தனது கோணத்தில் புலனாய்வு செய்து வழக்கை முடிக்க, வரலட்சுமி அதே வழக்கில் இருக்கும் பல மர்மங்களை தனது விசாரணை மூலம் கண்டுபிடிக்கும் போது படத்தில் பல எதிர்ப்பார்க்காத திருப்பங்கள் ஏற்படுகிறது.

எல்.சி.சந்தானமூர்த்தி

எல்.சி.சந்தானமூர்த்தி

வரலட்சுமியும், துரை சுதாகரும் இணைந்து தொடர் கொலைகளின் பின்னணி குறித்தும் உண்மையான குற்றவாளி யார்? என்பதை கண்டு பிடிக்கிறார்கள். வரலட்சுமி அளவிற்கு நிகரான கதாபாத்திரத்தை ஏற்று அதை சிறப்பாக செய்திருக்கிறார் சுதாகர். இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இவரிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

காவல்துறை அதிகாரியாக

காவல்துறை அதிகாரியாக

நடிகை வரலட்சுமி சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரங்கள் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியுள்ளது. அதற்கு சான்றாக அமைந்தவை தான் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி இப்படத்தில் இவரின் நடிப்பு மெச்சும் வகையில் இருக்கும். இந்த வரிசையில் தற்போது டேனி திரைப்படம் இடம் பெற்றுள்ளது இப்படத்தில் ஒரு கடமை தவறாத காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

வெளியாக உள்ளது

வெளியாக உள்ளது

எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் இவர் , முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த லாக்டவுன் சமயத்தில் பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வாய்ப்புகளை தக்க வைத்து கொள்ள பல நடிகர்கள் பல முயற்சிகள் செய்கிறார்கள். அப்படி செய்யும் பலருள் இவரும் ஒருவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X