Udal Review: மகனுக்கு துரோகம் செய்த மருமகள்.. புரட்டி எடுத்த மாமனார்.. ஊடல் விமர்சனம்!

சென்னை: கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியான மலையாளத் திரைப்படம் தான் ஊடல். இந்த படத்தில், துர்கா கிருஷ்ணா, ஜூட் அந்தனி ஜோசப், தியான் ஸ்ரீனிவாசன், இந்திரன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரதீஷ் ரெகுநந்தன் இயக்கி உள்ளார். ஒரே இரவில் ஒரே வீட்டில் நடக்கும் அடுத்தடுத்த மர்மத்தை மிகவும் சுவாரசியமாக இயக்குநர் கொடுத்து இருக்கிறார். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

கதை தொடங்கும் போதே ஒரு அழகான வீட்டில் படுத்தப்படுக்கையாக ஒரு கொச்சு என்கிற வயதான பெண்மணி படுத்து இருக்கிறாள். அவரால் எழுந்து நடக்கவோ, உட்காரவோ முடியாது, அவரை குளிப்பாட்டுவது, உடைமாற்றுவது என அனைத்தையும் அவரது மருமகள் ஷைனி செய்து வருகிறாள். மாமியாரை மட்டுமில்லால் 70 வயதான சரியாக கண் பார்வை தெரியாது காதுகேளாத மாமனாரையும் கவனித்துக்கொண்டு இருக்கிறாள் ஷைனி.

udal malayalam film review

ஊடல் விமர்சனம்: இளம்வயது பெண்ணான ஷைனிக்கு படுத்தப்படுக்கையாக இருக்கும் மாமியாரையும் மாமனாரையும் பார்த்துக்கொள்வதில் சுத்தமா விருப்பமே இல்லை, இருந்தாலும் வெளியூரில் வேலை செய்யும் தனது கணவர் ஜோசப்பிற்காக இதை சகித்துக்கொண்டு இருக்கிறாள் ஷைனி. பல முறை கணவரிடம் என்னால் உங்க அம்மாவிற்கு ஆயா வேலை செய்ய முடியாது என்று சொல்லியும் அவரது கணவன், அவங்க வயசானவங்க எங்கே போவாங்க என்று சொல்ல வேறு வழியில்லாமல் மனதிற்கு பிடிக்காத இந்த வேலையை செய்து வருகிறாள்.

udal malayalam film review

கள்ளக்காதலன்: ஷைனிக்கு இருக்கும் ஒரே ஆதரவு அவளுடைய கள்ளக்காதலன் கிரண் தான். கணவர் வேலை வேலை என்று வெளியூரில் இருப்பதால் ஷைனி யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் தனது காதலனுடன் இருப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறாள். அப்படி ஒருநாள் இரவில் இருவரும் சந்தித்த போது, என் கல்யாண வாழ்க்கையே நரகமாகிவிட்டது, படுத்த படுக்கையாக இருக்கும் என் மாமியாருக்கு பணிவிடை செய்வதிலேயே என் வாழ்க்கை முடிஞ்சிபோய்விடும் போல, இதில் இருந்து என்னை எப்படியாவது காப்பாத்து இந்த வாழ்க்கை நரகமா இருக்கு என்று சொல்லி அழுகிறாள்.

udal malayalam film review

தீர்த்துக்கட்ட பிளான்: இந்த நரக வாழ்க்கையில் இருந்து விடுபட, நான் ஒரு முடிவு செய்து வைத்து இருக்கேன், என் மாமியாரை கொன்றுவிடலாம் அப்போது தான் என் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு பதறிய கிரண் ஏதாவது பிரச்சனை வந்தா என்ன செய்வது என்று கேட்க, ஏற்கனவே அவர்களுக்கு உடம்பு சரியில்லை, இதனால், எந்த பிரச்சனையும் வராது, நீ கூட இருந்தா மட்டும் போதும் என்று சொல்ல, கிரணும் அந்த திட்டத்திற்கு தலையசைக்க இருவரும் சேர்ந்து மாமியாரின் கழுத்தில் ஈரதுண்டைப்போட்டு இறுக்கி கொன்றுவிடுகின்றனர்.

udal malayalam film review

திடீரென வந்த சந்தேகம்: அதன் பின், நாளை காலையில் நான் வழக்கம் போல, மாமியார் அறைக்கு செல்வேன், அப்புறம் அவர் இறந்துவிட்டதாக அழுவேன், என் கணவர் வருவார் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, கிரண் உண்மையில் உன் மாமியார் செத்துட்டாங்களா.. நல்லா தெரியுமா என்று கேட்க ஷைனிக்கும் சந்தேகம் வர இருவரும் மாமியார் அறைக்கு சென்று பார்க்க, உண்மையில் மாமியார் செத்துவிட்டார். எந்த சந்தேகமும் வேண்டாம் என்று சொல்லி நிம்மதி மூச்சுவிடும் போதுதான், மாமியார் கழுத்தில் போட்டு இறுக்கிய துண்டை காணவில்லை என்பது தெரிகிறது. அந்த துண்டை யார் எடுத்தார் என்ற பதற்றம் எகுற மாமனார் அனைத்தையும் பார்த்துவிடுகிறார்.

udal malayalam film review

பழிவாங்கிய மாமனார்: இதனால், பயந்து போன ஷைனி, அவனைவிட்டு வைத்தால் நம்மை சந்தோஷமாக வாழவிட மாட்டான், இவனையும் போட்டு தள்ளிவிட்டு மனைவி செத்த துக்கம் தாங்காமல் இவரும் செத்துவிட்டார் என்று சொல்லிவிடலாம் என்று திட்டம் போட்டு, மாமனாரை கொல்ல வர, மாமனாரோ இவர்கள் இருவரையும் கொல்லபக்காவாக பிளான் போட்டு, வீட்டு வாசலை பூட்டி, கரண்டை கட் செய்து அவர்களை மறைந்த மறைந்து தாக்குகிறார். மாமனாருக்கு சரியாக கண் தெரியாததால், அவரால் இருட்டில் அவர்களை தாக்க முடிகிறது. ஆனால், ஷைனி, கிரணுக்கு வெளிச்சம் இல்லாததால் மாமனாரிடம் மாட்டிக்கொள்கின்றனர். கடைசியில் மாமனார் என் மனைவியையா கொன்னே என்று கூறி மனைவியின் கொலைக்கு பழிவாங்கி இருவரின் கதையையும் முடித்துவிடுகிறார்.

ஒரே இரவில் ஒரு வீட்டில் நான்கு பெயரைவைத்து இந்த படத்தை இயக்குநர் இயக்கி உள்ளார். உண்மையில் இந்த படம் அடுத்தடுத்து ட்விஸ்டுகளுடன் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. இந்த ஊடல் திரைப்படத்தை ஓடிடியில் பார்க்கலாம். இப்படத்தின் டப்பிங் வெர்ஷனும் ஓடிடியில் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X