அப்போ அந்த 250 கோடி போச்சா.. தளபதி 69 தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல்?.. எச். வினோத் நிலைமை?
சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய் அடுத்ததாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் நடிக்கப் போவதாகவும் அந்த படத்தை எச். வினோத் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக டிவிவி நிறுவனத்துக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனை வெடித்து விட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் சினிமா வட்டாரத்தில் கொழுந்து விட்டு எரிகிறது.

நடிகர் விஜய் பயங்கர கடுப்பாகி அந்த தயாரிப்பு நிறுவனத்துடன் படம் பண்ணப் போவதில்லை என்றே மறுத்து விட்டதாக கூறுகின்றனர்.
ஆர்ஆர்ஆர் தயாரிப்பு நிறுவனம்: நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை ஏற்கனவே ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்புக் கொண்ட நிலையில், அந்த படம் தான் தனது கடைசி படம் என விஜய் அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் போது வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தார். ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் தான் விஜய் படத்தை தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
எச். வினோத் இயக்கம்: சதுரங்க வேட்டை படத்தில் பாம்புக்கு விஜய் என பெயர் வைத்து கலாய்த்த எச். வினோத் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என 3 படங்கள் எடுத்தும் பெரிதாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வந்த நிலையில், விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை அவர் தான் இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின.
250 கோடி சம்பளம்: எச். வினோத் இயக்கத்தில் டிவிவி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு அதிகபட்சமாக 250 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட தகவலையும் தயாரிப்பு நிறுவனம் தான் வெளியே கசிய விட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், டென்ஷனாக இருந்த விஜய் இப்போ ரொம்பவே கடுப்பாகி விட்டார் என்கின்றனர்.
தயாரிப்பு நிறுவனத்துடன் பஞ்சாயத்து: நடிகர் விஜய் இன்னமும் அந்த படத்தில் ஒப்பந்தமாகாத நிலையில், அவருக்கு தெரியாமலே படத்தின் டிஜிட்டல் உரிமம், சாட்டிலைட் உரிமம் போன்ற விஷயங்களை ரகசியமாக தயாரிப்பு நிறுவனம் செய்து விட்டதாகவும், அந்த விவகாரம் தெரிய வந்ததும் நடிகர் விஜய் இனிமேல் உங்களுக்கு படம் பண்ணப் போவதில்லை என அதிரடியாக மறுத்து விட்டார் என பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளனர்.
எந்தளவுக்கு உண்மை: தளபதி 69 படத்தின் தயாரிப்பு நிறுவனம் மாறப் போகிறது என்றும் டிவிவி நிறுவனத்துடன் விஜய் பணியாற்ற வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது எந்தளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமாக தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளிவந்தால் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு நிறுவனம் மாறினால் இயக்குநர் எச். வினோத்தும் மாற்றப்படுவாரா? ஏற்கனவே கமல்ஹாசன் காக்க வைத்து கழட்டி விட்டுட்டார். அடுத்து விஜய்யும் அவரை விரட்டி விட்டால் நிலைமை என்ன ஆகும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கடைசியில் கோட் படமே கடைசி படம் என விஜய் சொல்லிவிட்டால் அவ்வளவு தான்!


Click it and Unblock the Notifications











