எனக்கு, என் மனைவிக்கு, 2 மகள்களுக்கும் கொரோனா.. சமூக வலைதளத்தில் உறுதி செய்த டுவைன் ஜான்சன்
லாஸ் ஏஞ்சல்ஸ்: முன்னாள் WWF சாம்பியனும், பிரபல ஹாலிவுட் நடிகருமான டுவைன் 'ராக்' ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video
நடிகர் டுவைன் ஜான்சனுக்கும் அவரது மனைவி மற்றும் இரு மகள்களுக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பல பிரபல ஹாலிவுட் நடிகர்களை பாதித்துள்ள நிலையில், ராக்கின் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை.

ஹாலிவுட் பிரபலங்கள்
கொரோனா தொற்றுக்கு முதன் முதலாக பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹேங்க்ஸ் மற்றும அவரது மனைவி ரிட்டா வில்சன் ஆகிய இருவரும் பாதிக்கப்பட்டு மீண்டனர். அதன் பின்னர், பிரபல இயக்குநரும் நடிகருமான மெல் கிப்சன், ஆண்டோனியோ பண்டாரஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் கொரொனா பாதிப்புக்கு உள்ளாகினர்.

டுவைன் ஜான்சனுக்கு கொரோனா
'தி ராக்' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் WWF சாம்பியன் டுவைன் ஜான்சன், ஹாலிவுட்டின் முன்னணி நாயகனாக தற்போது மாறியுள்ளார். ஜுமான்ஜி, ஸ்கைஸ்க்ராப்பர், சான் ஆண்ட்ரியாஸ் மற்றும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் ஹாலிவுட் படங்களில் கலக்கி வருகிறார். தற்போது அவரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

டுவைன் ஜான்சன் குடும்பத்துக்கும்
பாலிவுட்டில் அமிதாப் பச்சன் குடும்பத்துக்கே கொரோனா பரவியது போல, நடிகர் டுவைன் ஜான்சன், அவரது மனைவி லாரன் ஹசியான், மற்றும் இரு பெண் குழந்தைகளான ஜாஸி மற்றும் டியா ஆகிய 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ராக் அறிவித்துள்ளார்.

ஒண்ணுமில்லை
மேலும், கடந்த இரு வாரங்களாகவே கொரோனா பாதிப்பில் இருந்து வருகிறோம். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், தனிமைப்படுத்தப்பட்டு, தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டதில், தற்போது கடவுளின் அருளால் அனைவரும் நலமுடன் உள்ளோம். மகள்களுக்கு அதிகளவில் கொரோனா பரவவில்லை. லேசான தொண்டை பிரச்சனை அறிகுறி மட்டுமே தெரிந்தது என்றும் கூறியுள்ளார்.

பிளாக் ஆடம்
சமீபத்தில், டிசி காமிக்ஸ் வரிசையாக தனது அடுத்த அடுத்த படங்களின் அப்டேட்களையும் டீசர்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தது. ஃபிளாஷ் படத்தில் பென் அஃப்லெக் மீண்டும் பேட்மேனாக வருகிறார் என்றும், ராபர்ட் பாட்டீன்சனின் பேட்மேன் ட்ரைலர், வொண்டர் வுமன் அடுத்த பாகத்தின் ட்ரைலர் எல்லாம் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், டுவைன் ஜான்சன் சூப்பர் ஹீரோவாக நடித்து வரும் பிளாக் ஆடம் படத்தின் இன்ட்ரோ டீசரையும் டிசி ரிலீஸ் செய்திருந்தது.


Click it and Unblock the Notifications











