Don't Miss!
- News
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக உணவகங்களில் பீப் பிரியாணி சேர்ப்பு! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இவரு வேற லெவல் சூப்பர்மேன்.. நிறைவேறியது ’ராக்’கின் சின்ன வயசு ஆசை!
Recommended Video
லாஸ் ஏஞ்சல்ஸ்: சின்ன வயசுல இருந்து சூப்பர்மேனாக ஆக வேண்டும் என்ற நடிகர் டுவைன் ஜான்சனின் ஆசை டிசியின் புதிய படத்தின் மூலம் நிறைவேறுகிறது.
ஆனால், இந்த படத்தில் 'ராக்' எனும் டுவைன் ஜான்சன் சூப்பர்மேனாக நடிக்கவில்லை. சூப்பர்மேன் சக்திகள் கொண்ட பிளாக் ஆதாமாக நடிக்கிறார்.

டிசியின் பிளாக் ஆதாம் படம் 2021ம் ஆண்டும் டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளது.
இதுகுறித்த செய்தியை தனது இன்ஸாகிராம் பக்கத்தில் நீண்டதொரு பதிவாக ராக் பதிவிட்டுள்ளார்.
ஹாலிவுட் நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ள டுவைன் ஜான்சன், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல அதிரடி ஆக்ஷன் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறியுள்ளார்.
WWE காலத்தில் இருந்தே ராக்கிற்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், திரைத்துறையிலும் அதனை தக்க வைத்து வருகிறார் நடிகர் டுவைன் ஜான்சன்.
டிசியின் தயாரிப்பில் சோலோ சூப்பர் ஹீரோவாக பிளாக் ஆதாம் படம் வெளிவருகிறது என்ற அறிவிப்பு ராக் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
View this post on InstagramA post shared by therock (@therock) on
சின்ன வயதில் இருந்தே, சூப்பர்மேனாக ஆக வேண்டும் என தான் கனவு கண்டதாகவும், தற்போது அந்த கனவு ஒருவழியாக நிறைவேற உள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிளாக் ஆதாம் மற்றும் சூப்பர் மேனனுக்கு ஒரு நூல் அளவு தான் வித்தியாசம் என்றும், சூப்பர் மேன் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி செயல்பட முடியாதென்றும், பிளாக் ஆதாமுக்கு அது போன்ற எந்தவொரு அளவீடுகளும் இல்லை எனவும் மக்களுக்கு வேண்டியதை செய்ய என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றும் ராக் தெரிவித்துள்ளார்.