வெள்ளை ஜட்டியில் டீன் ஏஜ் ’ராக்’… இன்ஸ்டாவை கலக்கும் அந்த புகைப்படம்!
ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சனின் 15வயது புகைப்படம் இன்ஸ்டா கிராமில் வைரலாகி வருகிறது. தி ராக் என செல்லமாக அழைக்கப்படும் டுவைன் ஜான்சன்
நியூயார்க்: உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் ஹாலிவுட் ஹீரோவாக உருவாகியுள்ளார் டுவைன் ஜான்சன்.
WWE போட்டிகளில் நம்பர் ஒன் சாம்பியனாக திகழ்ந்த டுவைன் ஜான்சனை பலரும் செல்லமாக 'தி ராக்' என அழைப்பார்கள்.
மல்யுத்த போட்டிகளை போலவே ஹாலிவுட்டிலும் டுவைன் ஜான்சன் உலகமெங்கும் தனக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்துக் கொண்டு கலக்கி வருகிறார்.

டாப் ஹீரோ
ரெஸ்ட்லிங் போட்டியில் இருந்து வெளிய வந்த கொஞ்ச காலத்திலேயே ஹாலிவுட்டின் மிகப்பெரிய படங்களில் எல்லாம் நடித்து ஹாலிவுட்டின் முன்னணி நாயகனாகவும், உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்கள் பட்டியலில் முதலிடத்தையும் டுவைன் ஜான்சன் பிடித்துள்ளார்.

அடுத்த புராஜெக்ட்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் ஃப்ரான்சைஸ் படமான ஹாப்ஸ் அண்ட் ஷா படம் இந்த ஆண்டு வெளியாகி உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து ஜங்கிள் க்ரூஸ், ஜூமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 10 மற்றும் ரெட் நோட்டீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் ஹீரோ
ஹாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் டுவைன் ஜான்சன், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிலும் 159 மில்லியன் ஃபாலோயர்களுடன் இன்ஸ்டாகிராம் ஹீரோவாக திகழ்கிறார். அவ்வப்போது அவர் பகிரும் புகைப்படங்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிகின்றன.

15 வயதில்
இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் டுவைன் ஜான்சன் பகிர்ந்த புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் 15வயதில் வெள்ளை ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு, அரும்பு மீசையுடன் 'ராக்' உட்கார்ந்துள்ளார். அந்த புகைப்படத்தின் கீழ், ஹவாயில் இருந்து வலுக்கட்டாயமாக நாஷ்வில்லேவுக்கு இடமாற்றம் செய்த போது எடுத்த புகைப்படம் என டுவைன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











