புயலால் கரண்ட் கட்.. திறக்கவில்லை வாசல் கதவு.. கைகளால் உடைத்துப் பெயர்த்த பிரபல ஆக்ஷன் ஹீரோ!
கலிபோர்னியா: படப்பிடிப்புக்கு செல்வதற்காக, தனது வீட்டின் கேட்டை உடைத்து தள்ளியிருக்கிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வைன் ஜான்சன்.
ஹாலிவுட்டின் பிரபலமான ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவர், டிவைன் ஜான்சன்.
ஜுமான்ஜி, ஸ்கார்பியன் கிங், ராம்பேஜ், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ரெட் நோட்டீஸ்
ராக் என்ற பெயரில் மல்யுத்தப் போட்டிகளில் கலக்கியவர் இவர். தற்போது ரெட் நோட்டீஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் இணை தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் படத்துடன் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

மின் சேவை
"எனக்கு நேரம் சரியில்லை. ஆனாலும் வேலைக்குச் செல்ல வேண்டும். புயல் காரணமாக மின் சேவை தடைப்பட்டுவிட்டது. இதனால் என் வீட்டின் வாயில் கதவு திறக்கவில்லை. அதற்கான ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யவில்லை. திறக்க முயன்றும் முடியாததால், இதைச் சரி செய்கிற தொழில்நுட்ப நிபுணரை தொடர்புகொண்டு எப்போது வர இயலும் என்றேன்.

பெயர்த்து எடுத்துவிட்டேன்
சுமார் 45 நிமிடங்கள் ஆகும் என்றனர். ஆனால், எனக்காக படக்குழுவைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் காத்திருப்பதை அறிவேன். அதனால் நான் செய்ய வேண்டியதை செய்தேன். அதாவது அந்த வாயில் கதவை, பிடித்துத் தள்ளி, இழுத்து, உடைத்து மொத்தமாக பெயர்த்து எடுத்துவிட்டேன். ஹைட்ராலிக்ஸை துண்டித்து புல்வெளியில் வீசினேன்.
Recommended Video

நேரம் சரியில்லை
ஒரு மணி நேரத்தில் எனது பாதுகாப்புக் குழு, தொழில்நுட்ப வல்லுநரையும், வெல்டிங் செய்பவர்களையும் அழைத்து வந்தனர். ஆனால், அந்த கேட்டை நான் எப்படி மொத்தமாகப் பெயர்த்ததை கண்டு அவர்கள் பயத்தில் இருந்தார்கள். எனக்கு நேரம் சரியில்லைதான். ஆனால் நான் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இவ்வாறு தெரிவித்துள்ளார். நிஜவாழ்க்கையிலும் அவர் ஆக்ஷன் ஹீரோவாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications