எங்க ஏரியா உள்ள வராதே.. மல்யுத்த வீரராக மாறும் ராக்!
ஹாலிவுட் நடிகர் மற்றும் WWE வீரர் டுவைன் ஜான்சன் பிரபல மல்யுத்த வீரரான மார்க் கெர் பயோபிக்கில் நடிக்கவுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: தி ராக் என செல்லமாக அழைக்கப்படும் WWE வீரர் டுவைன் ஜான்சன், கடந்த சில காலமாக ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
ஹாலிவுட்டின் நடிகர்களுக்கு போட்டியாக களமிறங்கிய டுவைன் ஜான்சன், குறுகிய காலத்திலேயே, அதிக சம்பளம் வாங்கும் ஹாலிவுட் நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

MMA எனும் மல்யுத்த போட்டியில் பல முறை சாம்பியன்ஷிப் வெற்ற பிரபல மல்யுத்த வீரர் மார்க் கெர் குறித்த பயோபிக்கில் தற்போது டுவைன் ஜான்சன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
டுவைன் ஜான்சனும் ஒரு மல்யுத்த வீரர் என்பதால், மார்க் கெர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சண்டை காட்சிகள் பல மடங்கு ரியலாக உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பை நடிகர் டுவைன் ஜான்சன் சமீபத்தில் நடந்த UFC 244 பிரஸ் கான்ஃபெரன்சில் அறிவித்தார்.
மல்யுத்த வீரர் மார்க் கெர் குறித்த பயோபிக் ஹாலிவுட்டில் உருவாகும் செய்தி அறிந்த அவரது ரசிகர்கள், ராக் நடிக்கும் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மல்யுத்த போட்டியில் எதிரிகளை வீழ்த்துவதில் வல்லவரான மார்க் கெர்ரை ஸ்மாஷிங் மெஷின் என அவரது ரசிகர்கள் அழைப்பது வழக்கம். அவரை திரையில் தன்னால் இயன்ற அளவில் திருப்திகரமாக வெளிப்படுத்த முயற்சிப்பேன் என மார்க் கெர் ரசிகர்களுக்கு ராக் உறுதியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











