எனக்கு விழுற ஒவ்வொரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க!

சென்னை: பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியின் ரன்னர் அப் பாலாஜி முருகதாஸ் தனது பிக்பாஸ் பயணத்திற்கு பிறகு முதல் முறையாக சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Aari யின் வெற்றியை பாராட்டிய Bigg Boss போட்டியாளர்கள் - Filmibeat Tamil

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கியது.

18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா மற்றும் சோம் ஆகிய 5 பேர் ஃபைனலிஸ்ட்டுகளாயினர்.

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல்

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல்

பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது பிக்பாஸ் சீசன் 4. ஒவ்வொரு போட்டியாளருமே ஒரு ரகமாய் இருந்தனர். சிலருக்கு இந்த நிகழ்ச்சி பாஸிட்டிவாகவும் சிலருக்கு நெகட்டிவாகவும் இருந்தது.

கிராண்ட் ஃபினாலே

கிராண்ட் ஃபினாலே

பிடித்த போட்டியாளர்களை கொண்டாடிய ரசிகர்கள் ஓவர் ஆட்டியூட் காட்டிய ரசிகர்களை கழுவி ஊற்றினர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று நடைபெற்றது.

 ஒவ்வொரு ஓட்டும்..

ஒவ்வொரு ஓட்டும்..

இதில் பாலாஜி ரன்னர் அப் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, எனக்கு விழுற ஒவ்வொரு ஓட்டும் கப்புதான் என போட்டோவுடன் ஷேர் செய்துள்ளார்.

ஆதரித்தவர்களுக்கு நன்றி

ஆதரித்தவர்களுக்கு நன்றி

மேலும் இந்த அற்புதமான பயணத்தில் என்னை ஆதரித்த எனது ரசிகர்கள் அனைவருக்கும், மேலும் கடினமாக உழைக்கவும், சிறப்பாக இருக்கவும் என்னைத் தூண்டிய என் சந்தேக நபர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் நேரம், அன்பு மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜிக்கு நன்றி.. என பதிவிட்டுள்ளார்.

ஷிவானியுடன் போட்டோ

ஷிவானியுடன் போட்டோ

பாலாஜியின் இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு தங்களின் ஆதரவை தெரியப்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் உங்களின் நெருங்கிய தோழியான ஷிவானியுடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை அப்லோட் பண்ணுங்க என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X