சூப்பர்ஸ்டாரோட ஜாய்ன் ஆகறதுக்காக ரொம்ப ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன்... பூஜா ஹெக்டே உற்சாகம்
மும்பை : தளபதி 65 படத்தில் கமிட் ஆகியுள்ளார் பூஜா ஹெக்டே. கொரோனாவால் இதன் இரண்டாவது கட்ட சூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பாலிவுட்டிலும் சில படங்களில் இணைந்துள்ளார். குறிப்பாக சல்மானுடன் கபி ஈத் கபி தீபாவளி என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த படம் குறித்து பூஜா ஹெக்டே தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

மீண்டும் கோலிவுட்
முகமூடி படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து மற்ற வுட்களில் ஒரு சுற்று சுற்றிவிட்டு தற்போது மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்பியுள்ளார். தளபதி 65 படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சல்மானுடன் நடிப்பு
இந்நிலையில் பாலிவுட்டிலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். குறிப்பாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் கபி ஈத் கபி தீபாவளி படத்தில் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார். பர்ஹாத் சம்ஜி இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படமும் கொரோனா பாதிப்பால் தற்போது தடைப்பட்டுள்ளது.

பூஜா ஹெக்டே மகிழ்ச்சி
தமிழின் வீரம் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுவரும் இந்த படத்தில் இணைந்துள்ளது குறித்து பூஜா ஹெக்டே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த படத்தை முன்னதாகவே எடுக்க படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் தற்போத சூட்டிங் தடைபட்டுள்ளதாகவும் அவர் தனது வலைதளத்தில் கூறியுள்ளார்.

மிகுந்த ஆர்வம்
நிலைமை சற்றே சரியானவுடன் மீண்டும் சூட்டிங் துவங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் சல்மான் கானுடன் இணைந்து நடிக்க தான் மிகவும் ஆர்வமுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பூஜா ஹெக்டே தற்போது அதிலிருந்து மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுக்கு மாம்பழங்கள்
மேலும் இந்த கோடை காலத்தில் சினிமா இன்டஸ்ட்ரீயில் இருக்கும் தனது நண்பர்களுக்கு அவர் மாம்பழங்களை பரிசாக அனுப்பி அனைவரையும் கவர்ந்து வருகிறார். தெலுங்கில் அவரது மோஸ்ட் எடிபிள் பேச்சிலர் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய இரண்டு படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











