twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்!

    By
    |

    லண்டன்: பிரபல ஹாலிவுட் நடிகர் இயர்ல் கேமரான் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 104.

    பிரிட்டீஷ் படங்களில், முதன்முதலாக நடித்த கருப்பின நடிகர்களுள் ஒருவர்
    இயர்ல் கேமரான் (Earl Cameron).

    Earl Cameron, Britains first black film star dies aged 102

    1951 ஆம் ஆண்டு பூல் ஆஃப் லண்டன் (Pool of London) என்ற படத்தில் நடித்தார். ஹீரோவுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் கருப்பினத்தவர் ஒருவர் நடித்த பிரிட்டீஷ் படம் இது. அந்த காலகட்டத்தில் இது பரபரப்பாகப் பேசப்பட்டது.

    தொடர்ந்து சிம்பா, த ஹார்ட் வித்தின், டார்ஜான் த் மேக்னிபிசியன்ட், கியூபா, த இன்டர்பிரிடர், த குயின் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நான்காவது ஜேம்ஸ்பான்ட் படமான 'தண்டர்பாலி'ல் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

    ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ள இவர், கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்சன் படத்தில் நடித்திருந்தார். பிறகு நடிக்கவில்லை.

    Earl Cameron, Britains first black film star dies aged 102

    பெர்முடாவில் பிறந்த இவர், 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு வந்தார். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் கருப்பினத்தவருக்கு எந்த வேலையும் கிடைக்காத சூழலில் அங்கு வளர்ந்தவர். 'இங்கிலாந்தின் இனவெறி என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. அதனோடுதான் நானும் வளர்ந்தேன்' என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இயர்ல் கேமரான்.

    அந்த 10 நாட்கள்.. மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதித்த கொரோனா.. வைரஸ் தாக்கிய டிவி நடிகை கவலை! அந்த 10 நாட்கள்.. மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதித்த கொரோனா.. வைரஸ் தாக்கிய டிவி நடிகை கவலை!

    இங்கிலாந்தின் வார்விக்‌ஷையரில் வசித்து வந்த அவர் முதுமை காரணமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் தனது வீட்டில் அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Read more about: cinema
    English summary
    Earl Cameron, who with his debut role in the 1951 film Pool of London, became one of the first significant black actors in British cinema, has died.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X