காலா ரஜினி படமா, ரஞ்சித் படமா?: என்ன சொல்கிறார் ஈஸ்வரி ராவ்
Recommended Video

சென்னை: காலா ரஜினி படமா இல்லை ரஞ்சித் படமா என்று ஈஸ்வரி ராவ் தெரிவித்துள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தில் சூப்பர் ஸ்டார் மனைவியாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். எத்தனையோ நடிகைகள் ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் போது 44 வயதான ஈஸ்வரி ராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது.

வாய்ப்பு
16 வயதில் இருந்து சினிமா துறையில் உள்ளேன். வாய்ப்பு கேட்டு யாரிடமும் போய் நின்றது இல்லை. ஹீரோயின்கள் என்றாலே கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று டிரெண்ட் மாறியதால் நான் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கவில்லை.

சிவப்பு
நான் நடிக்க வந்தபோது மாநிறமாக இருந்தேன். ஆனால் அப்போது சிவப்பாக உள்ள ஹீரோயின்களுக்கு தான் மவுசு. காலா படத்தில் நான் வெறும் பிளாஷ்பேக்கில் மட்டும் தான் வருவேன் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

ஹூமா குரேஷி
காலா படத்தில் ஹூமா குரேஷி இருப்பதால் எனக்கு முக்கியத்துவம் இல்லை என்று நினைக்கிறார்கள். நான் பிளாஷ்பேக்கில் மட்டும் வர மாட்டேன். என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது.

கெமிஸ்ட்ரி
காலா படத்தில் எனக்கும், ரஜினி சாருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக வந்துள்ளது என்றால் அது இயக்குனர் பா. ரஞ்சித்தையே சேரும். மேக்கப் போட வேண்டாம், தலை முடிக்கு டை அடிக்க வேண்டாம், இயற்கையாக இருந்தால் போதும் என்றார் ரஞ்சித். எனக்கு அது பிடித்திருந்தது.

ரஜினி
என் மகனும், மகளும் ரஜினி சார் ரசிகர்கள். நான் அவருடன் சேர்ந்து நடித்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி. அவர்கள் விரும்பியதால் தான் மீண்டும் படங்களில் நடிக்க வந்தேன். காலா ரஜினி சார் மற்றும் ரஞ்சித் படம் என்கிறார் ஈஸ்வரி ராவ்.


Click it and Unblock the Notifications











