First Sex Scene in a Movie: உலகிலேயே முதன்முதலில் உடலுறவு காட்சி இடம் பெற்ற படம் எது தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை உடலுறவு காட்சிகள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ இன்று பல படங்களில் சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகின்றன.

வல்லவன் படத்தில் நயன்தாராவை கட்டிலில் சிம்பு புரட்டி எடுத்து இருப்பார். சிவா மனசுல சக்தி படத்தில் எல்லாத்தையும் முடித்து விட்டு காசு கொடுப்பது போல கிண்டல் செய்ய அனுயா கோபத்துடன் பிரிந்துச் செல்வார்.

இப்படி கோலிவுட்டில் பல படங்களில் படுக்கையறை காட்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், சமந்தா தி ஃபேமிலி 2 வெப்சீரிஸில் படுக்கையில் உடலுறவு கொள்ளும் நபரை கொல்லும் காட்சி அதிர வைத்தது. சமீபத்தில் வந்த ராணா நாயுடு வெப்சீரிஸில் ஏகப்பட்ட ஆபாச உடலுறவுக் காட்சிகள் அப்பட்டமாக எடுக்கப்பட்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தன.

Ecstasy movie contains First Sex Scene in Cinema

ஹாலிவுட்டில் நிர்வாணக் காட்சிகள்; ஆனால், ஹாலிவுட்டை எல்லாம் சொல்லவே வேண்டாம். முழு நிர்வாணமாகவே உடலுறவு காட்சிகள் பல படங்களில் எடுக்கப்பட்டுள்ளன.

ஏஞ்சலினா ஜோலி, கேட் வின்ஸ்லெட், மோனிகா பெல்லூசி, சல்மா ஹயக் உள்ளிட்ட பல பிரபல நடிகைகள் முதல் வில் ஸ்மித், லியோனார்டோ டிகாப்ரியோ, பிராட் பிட் என ஏகப்பட்ட பிரபல நடிகர்களும் நிர்வாணமாக உடலுறவு காட்சிகளில் நடித்துள்ளனர்.

ஹீரோயினாக மாறிய சன்னி லியோன்: ஆபாச நடிகையாகவே வலம் வந்து சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்த சன்னி லியோன் கவர்ச்சி நடிகையாக பாலிவுட் முதல் கோலிவுட் வரை தற்போது நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட ரியல் செக்ஸ் சீன்களிலேயே சன்னி லியோன் நடித்து வந்த நிலையில், சினிமாவிலும் எல்லை மீறிய எரோடிகா நடிப்பை கொட்டி வருகிறார்.

Ecstasy movie contains First Sex Scene in Cinema

தடைகளை கடந்து: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆபாசக் காட்சிகளில் நடிக்கவும், நிர்வாணமாக நடிக்கவும் சென்சார் போர்டில் தடை இருந்தாலும், ஒரு சில படங்கள் அந்த தடையை உடைத்து எறிந்தும் வெளியாகி உள்ளன. ராதிகா ஆப்தே பார்ச்சட் படத்தில் முழு நிர்வாணமாக உடலுறவு காட்சிகளில் நடித்து இருப்பார்.

கண்டு உள்ளிட்ட பல படங்கள் அதுபோன்ற காட்சிகளுக்காகவே தடை செய்யப்பட்டன. காமசூத்ரா வகை படங்களும் இங்கே ஏ சான்றிதழ் உடன் வெளியாகி உள்ளன.

முதல் முறையாக உடலுறவு காட்சி இடம்பெற்ற படம்: ஹாலிவுட்டில் இன்று சர்வ சாதாரணமாக எடுக்கப்பட்டு வரும் இது போன்ற காட்சிகள் ஆரம்பக் கட்டத்தில் அமெரிக்காவிலேயே தடை செய்யப்பட்டு இருந்தன.

Ecstasy movie contains First Sex Scene in Cinema

உலக சினிமாவிலேயே முதன்முறையாக 1933ம் ஆண்டு வெளியான Ecstasy திரைப்படத்தில் தான் உடலுறவுக் காட்சி இருந்ததாக கூறுகின்றனர். அப்போது அந்த படத்தை அமெரிக்காவில் வெளியிடவே தடை விதிக்கப்பட்டதாகவும் 1940ம் ஆண்டு தான் அந்த தடை நீக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

செக் குடியரசை சேர்ந்த இயக்குநர் குஸ்தவ் மச்சாட்டி (Gustav Machatý) இயக்கத்தில் 1933ம் ஆண்டு வெளியான எக்ஸ்டஸி திரைப்படத்தில் தான் முதன் முதலாக உடலுறவுக் காட்சி இருந்ததாகவும் ஆஸ்திரியாவில் பிறந்த நடிகை எட்டி லாமர் (Hedy Lamarr) ஏவா எனும் கதாபாத்திரத்தில் வயதான நபருக்கு விருப்பமில்லாமல் கட்டிக் கொடுக்கப்பட அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழத் துடிக்கிறாள்.

அப்போது ஒரு நாள் நிர்வாணமாக ஆற்றில் குளித்துக் கொண்டிருக்க அவளது ஆடைகளை குதிரை ஒன்று எடுத்துக் கொண்டு செல்ல, அங்கே வரும் இளைஞர் ஒருவர் ஆடையில்லாமல் செடி மறைவில் இருக்கும் அவருக்கு ஆடைகளை வழங்க இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.

அதன் பலனாக அன்று இரவு அவர்கள் இருவருக்கும் நடக்கும் அந்த உச்சக்கட்ட காட்சியை எக்ஸ்டஸி படத்தில் வைத்து இனி சினிமாவில் பூவும் பூவும் ஒட்டிக் கொள்ளும் முதல் இரவு காட்சிகளுக்கு முழுக்குப் போட்டு விட்டு நடிகர்களை வைத்தே சினிமாவுக்காக இப்படி காட்சிகளை எடுக்கலாம் என எடுத்துக் காட்டிய படமாக எக்ஸ்டஸி மாறியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X