Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐசரி கணேஷின் ரூ.8.94 கோடி சொத்துகள் முடக்கம்.. அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் நடவடிக்கை
சென்னை: வேல்ஸ் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் ரூ.8.94 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
வெளிநாட்டில் சட்டத்துக்கு புறம்பான பண பரிவர்த்தனையை செய்ததாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மீது அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், ஐசரி கணேஷுக்கு இப்படியொரு பேரிடி வந்துள்ளது.
Cobra Memes: மண்ணுளி பாம்பை வித்துட்டாங்க செட்டியார்.. ட்ரிம் பண்ணாலும் விட மாட்டானுங்க போல!
சிம்பு படம்
ஐசரி கணேஷ் தயாரிப்பில் வரிசையாக ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன. கெளதம் மேனனின் கடன்களை அடைக்க சம்மதித்து சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கும் வாய்ப்பையு ஐசரி கணேஷ் கொடுத்திருந்தார். வரும் செப்டம்பர் 15ம் தேதி வெந்து தணிந்தது காடு படம் வெளியாக உள்ள நிலையில், அதன் தயாரிப்பாளர் மோசடி வழக்கில் சிக்கி உள்ளார்.
சொத்துக்கள் முடக்கம்
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் ரூ.8.94 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அந்நியச் செலாவாணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள ரூ.8.94 கோடி மதிப்புள்ள நிலத்தை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆடியோ லான்ச்
தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்கள் பங்கு பெறும் வகையில் பிரம்மாண்டமாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவை செப்டம்பர் 2ம் தேதி (நாளை) நடத்த திட்டமிட்டுள்ளார் ஐசரி கணேஷ். இந்நிலையில், அவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல் பங்கேற்பு
வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருந்தார் ஐசரி கணேஷ். மேலும், தமிழ் திரையுலகில் பல பிரபலங்களையும் இந்த விழாவிற்கு அழைத்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் லைவ்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவில் தனது இசையில் உருவான அத்தனை பாடல்களையும் லைவாக பர்ஃபார்மன்ஸ் செய்யப் போகிறார் என்றும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சொத்துக்கள் முடக்கம் குறித்த விளக்கத்தை ஐசரி கணேஷ் நிகழ்ச்சியில் அறிவிப்பாரா? என்றும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.